சத்துருவின் தாக்குதல்

சிம்சோனுக்கு எதிராக வந்த சத்துருவின் தாக்குதல் அவனுடைய மேன்மையான அழைப்புக்கு விரோதமான தாக்குதலாக இருந்தது.

 தான் பெலிஸ்தரை அழிக்கும்படியாக தேவனால் எழுப்பபட்டவன் என்பதை அவன் மிகவும் நன்றாக அறிந்திருந்தான்
ஆயினும் தன்னுடைய மகா மேன்மையான அழைப்பை அசட்டை பண்ணி அவன் இச்சைக்கு இடங்கொடுத்து ஒரு பெலிஸ்திய பெண்ணை நேசித்தான்.அவளோ அவனைக்காட்டிக்கொடுத்துவிட்டாள்;அவன் எப்படி துக்ககரமான விதங்களில் தன்னுடையமேன்மையும் உன்னதமுமான அழைப்பை இழந்து பெலிஸ்தரோடு கூட மடிந்துபோனான்

இன்றும் அதே யுத்தம்தான் எல்லோருக்குள்ளும் நடக்கிறது.மாம்ச இச்சை,கண்ணின் இச்சை,பொருளாசையாகிய இச்சை,ஜீவனத்தின் பெருமையாகிய புகழாசையாகிய இச்சை என்ற எத்தனைப் பெயரிலும் அவை உருமாறி வந்தாலும் மொத்தத்தில் இச்சையே!
இவற்றினை ஜெயித்துவிட்டேன் என்று ஒருவன் சொல்லும்போது ஜீவனத்தின் பெருமையில் விழுத்துவிடுகிறான்.
தேவ கிருபையினால் கிடைக்கும் தேவ பெலத்தால் இவற்றை மேற்கொள்ள தேவன் நமக்கு வல்லமையும்,பெலனையும் பெற்று நம்மைநாமே உணர்ந்து மனதாழ்மையுடன் இருந்து ஜெயம் பெறமுடியும் ஆனாலும் அவை (இச்சை)ஒவ்வொருமுறையும் தன்னை மாற்றி வேடமிட்டு தாக்கும் .இதே உலகத்தில் இவற்றை ஜெயிக்க சுயத்தை முற்றிலும் சிலுவையில் அடித்து ஜீவிப்போருக்கு எவ்வித இச்சையின் தாக்குதல் இல்லாமல் இளைப்பாறுதலான ஜீவியம் உண்டு இந்த இளைப்பாறுதலை பெற அநேக விலைகிரயம் நாம் செலுத்தவேண்டும்.அநேக சுயத்தை சாகடிக்கும் அனுதின பாடுகளில் ஜெயிக்கவேண்டும் அதன் வெற்றியே பரிபூரண ஜீவியமும்,இளைப்பாறுதலும்.கடல் அலைகள் கடலின் மேலே அடிக்கும் அதே கடலுக்கு கீழே அமைதி இருக்கும்.

அதேபோல் சுயத்தை சாகடிக்க மனத்தாழ்மை என்ற கவசத்தால் நாம் ஆழத்துக்குள் போய் போராட்டம் இல்லாமல் அமைதலாக இருக்கமுடியும் .

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post