வெளிப்பாட்டின் நான்காவது முத்திரை

வெளிப்பாட்டின் நான்காவது முத்திரை- கொள்ளைநோய்

அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:7

நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:8

மூன்றாவது மற்றும் நான்காவது முத்திரைகள் ,பஞ்சம், கொள்ளைநோய், மற்றும் உலகளவில் ஏற்படும் அனைத்து மரணங்களுமாம்.

இந்த குதிரையின் வீரனுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது, அது மரணம், அதைத் தொடர்ந்து பாதாளம் அவன்பின் சென்றது. அது இறந்தவர்களின் உலகம் எனப்படும்.

பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக்
கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆட்டுக்குட்டியானவர் இதுவரையிலும் நான்கு முத்திரைகளை உடைத்திருக்கிறார். யுத்தம் பஞ்சம் சாவு ஆகிய நியாயத்தீர்ப்புக்கள் இதுவரையிலும்
உண்டாயிற்று. இப்போது தேவனுடைய புதிய நியாயத்தீர்ப்பாக பூமியின் துஷ்டமிருகங்கள் வந்திருக்கிறது உலகத்தில் பட்டயமும்

பஞ்சமும், சாவும் தாராளமாய் வரும்போது, ஏராளமான ஜனங்கள் இவற்றில் சிக்கி
செத்துப் போவார்கள் இவற்றிற்குத் தப்பி உயிரோடிருக்கிறவர்கள் கொஞ்சம் பேராகவே இருப்பார்கள். எண்ணிக்கையில் குறைவானவர்களை அழித்துப்போடுவது மிகவும் எளிது.
இவர்களை அழிக்கக்கூடிய அதிகாரம் பூமியின் துஷ்டமிருகங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூமியின் காற்பங்கில் உள்ளவர்களை கொலைசெய்யும்படியான அதிகாரம் இந்த துஷ்டமிருகங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பூமியின் துஷ்ட மிருகங்கள் என்னும் வார்த்தை மிருககுணமுள்ள மனுஷரையும், துன்மார்க்க குணமுள்ள மனுஷரையும், கொடூரகுணமுள்ள
மனுஷரையும் குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் கருத்து சொல்கிறார்கள்.
ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள், அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.
உபாகமம் 32:43

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப்பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?
எசேக்கியேல் 14:21

மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
எசேக்கியேல் 39:17

நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள், அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.
எசேக்கியேல் 39:18

நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
எசேக்கியேல் 39:19

இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
எசேக்கியேல் 39:20

முதல் நான்கு முத்திரைகளினால் பூமியில் யுத்தங்களும், பஞ்சங்களும், கொள்ளை நோய்கள் உண்டாகும் போது ஏராளமானோர் மடிந்து போனார்கள் அவர்களுடைய சரீரங்களைப் புசிப்பதற்காக துஷ்டமிருகங்கள் அங்கு கூடிவரும்.

சொல்லப்பட்ட காரியங்கள்(கொள்ளை நோய்கள், போர்கள்,பஞ்சங்கள்)பல இடங்களில் நடக்க ஆரம்பித்திருக்கிறது.இவை அனைத்தும் நமக்குதேவனாகிய கர்த்தர் விரைவில் வருகிறார் என்பதை உணர்த்துகிறது.

மனம் திரும்புங்கள் கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.

Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post