ஜெபத்தை கேட்கிறவர்
ஒரு பெற்றோர் எங்கள் சபையில் சொன்ன சாட்சியை தேவநாம மகிமைக்காகவும், உங்கள் பக்திவிருத்திக்காகவும் பதிவிடுகிறேன். அந்த பெற்றோர் தனது மகனுடைய இரட்சிப்புக்காக 29 வருடங்களாக தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளார்கள். அந்த பெற்றோரின் ஜெபத்தினால் அந்த பையன் இரட்சிக்கபட்டு கடந்த வாரம் ஞானஸ்தானம் எடுத்துக் கொண்டான்.
நமது தேவனுடைய பெயர் ஜெபத்தை கேட்கிறவர் - சங் 65:2
தேவ ஜனமே உன்னுடைய ஜெபத்தை எல்லாம் தேவன் கேட்கிறார்.
இன்னும் ஜெபத்துக்கு பதில் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து போக கூடாது. அதனால்தான் இயேசு "சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்" என்றார் (லூக் 18:1). சோர்வு பிசாசின் கொடிய ஆயுதம். ஜெபத்தில் சோர்வு கூடாது. சில பேர் ஒரு காரியத்துக்காக 2 மாதம்/3 மாதம்/1 வருடம்/2 வருடம் ஜெபிப்பார்கள். பதில் கிடைக்காவிட்டால் சோர்ந்து போய் அந்த காரியத்துக்காக ஜெபிப்பதை நிறுத்தி விடுவார்கள்.
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
லூக்கா 18:7
சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 18:8
ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.
ரோமர் 12:12
உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு 7-11
கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.
யோ 16-24
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
சங்கீதம் 65:2
Download our daily bread app on below link.
Post a Comment