நம்முடைய தேவன் இரக்கமுள்ள தேவன்




நம்முடைய தேவன் இரக்கமுள்ள தேவன்

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். 
யோனா 1:2

நினிவே பட்டணத்தின் ஜனங்கள் அக்கிரமங்கள் தேவனுடைய சமுகத்தை எட்டினது.  எனவே தேவன் நினிவே பட்டணத்த ஜனங்களை எச்சரிக்கும்படி யோனாவை அனுப்பினார்.  யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான். நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது  யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் என்று கூறினான்.(யோனா 3:3-4)  நினிவே ஜனங்கள் அக்கிரமகாரர்களாய் இருந்தாலும் தேவனுடைய நியாத்தீர்ப்பை குறித்து அறிந்த உடனே தங்களை தாழ்த்தி தேவன் பக்கமாய் தங்களுடைய முகத்தை திருப்பினார்கள்.  அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.   இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.  மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமல் இருக்கவும்,   மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.   யாருக்குத் தெரியும். நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிரகோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச் சொன்னான்.   அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.(யோனா 3:5-10)

பிரியமானவர்களே, நினிவேக்கு நடந்த காரியம் தேவன் நம் மேல் கொண்டுள்ள இரக்கத்தை வெளிப்படுத்துகிறது.  மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அக்கிரமங்களையும் செய்திருந்தாலும் அவன் மனந்திரும்பி தேவன் பக்கமாய் திரும்பும் போது தேவன் அவர்களுடைய அக்கிரமங்களை மன்னித்து தம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.  நினிவே பட்டணத்தின் இராஜா முதல் எல்லா ஜனங்களும்  தங்களை தாழ்த்தி மனந்திரும்பிய போது தேவனுடைய கிருபையை பெற்றார்கள்.  நினிவே அழிவிலிருந்து தம்பியது.  

 நம்முடைய தேவன் இரக்கமுள்ள தேவன், இன்றும் நாம் மனம் திரும்பி ஒருமனப்பட்டு ஜெபிப்போம்மானால் தேவன் இந்த கரோனா வைரஸை நம்மை விட்டு அகற்ற வல்லவராயிருக்கிறார்.முதலாவதாக தேவனுடைய ஜனங்கள் நாம் மனம் திரும்பி நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகி உண்மையாய் கர்த்தருடைய பாதத்தில் கண்ணீர்விட்டு ஜெபிப்போம்மானால் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார்.


 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்.  (2நாளா 7:14). 

 உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.  ஆனால் ஒரு மாற்றத்தையும் உங்களால் காணமுடியவில்லை.  யோனா நினிவே அழிக்கப்படும் என்று பிரசங்கித்தான், ஜனங்கள் மனந்திரும்பியபோது காரியங்கள் மாறியது.  இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் காணப்படும் தேவனுக்கு பிரியமில்லாத பொல்லாதவழிகள் என்ன என்பதை சோதித்து மனந்திரும்புங்கள். 

 நினிவேயின் காரியங்கள் மாற்றப்பட்டது போல நீங்களும் மாற்றங்களை காண்பீர்கள்.  தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.(மீகா 7:18)

ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள், அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.  – எசேக்கியேல் 18:30

உபவாச நாள் - 26,27,28 daily morning to evening.


Download our daily bread app on below link.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post