பயப்படாதே


பயப்படாதே.


இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 15:1

இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம்சிலருக்கு வியாதியைக் குறித்து பயம்சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம்,சிலருக்கு மரணத்தை குறித்த பயம்,இப்படி பயம் பல விதங்களில் மனிதனுக்கு வருகிறது.

பிரியமானவர்களேநம்மைப் படைத்த தேவன் யார் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமையுளள் தேவன். அவர் சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடிக் கூட கீழே விழுவதில்லை. அப்படி இருக்கும்போதுநாம் எதைக் குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்பயப்பட வேண்டும்ஜீவனுள்ள தேவன் நம்மோடு கூட இருக்கும்போது இருளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்இருள் நம்மை சூழ்ந்தாலும் அவர் வெளிச்சமாய் நம்மைக் காத்துக் கொள்வாரே! இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர்;. பெருங்காற்று அடித்துகடல் கொந்தளித்தபோதுசீஷர்கள் பயந்திருக்கும்போது பயப்படாதிருங்கள் என்று சொல்லி அவர்களை கரைசேர்த்த தேவன் (யோவான் 6:18-21) இன்றும் நம் வாழ்க்கையில் வரும் கொந்தளிப்புகளையும்புயல்களையும் அடக்கிநம்மை கரை சேர்க்க வல்லவராயிருக்கிறார்.

இந்தக் கொள்ளை நோயை கண்டு நீ ஏன் கலங்குகிறாய்,சர்வவல்லமையுள்ள தேவன் உன் பட்சம் இருக்க நீ ஏன் கலங்குகிறாய்?நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். 
யாத்திராகமம் 15:26.

இது தேவன் உனக்கு கொடுக்கும் ஒரு எச்சரிக்கை.உன் பாவ வழியை விட்டு விலகி தேவனுக்குப் பிரியமான நட,தேவன் வர தாமதமாகும் என்று எண்ணாதே,நீ நினையாத நாழிகையிலே கர்த்தர் வருவார்.இன்றே உன் தீய வழியை விட்டு விலகு,உன் பாவத்தை அறிக்கையிட்டு  தேவனிடம் மன்றாடு.தேவன் வருகையில் கைவிட பட்டவனாய் இருக்காதே.

இவை அனைத்தும் தேவனுடைய வருகைக்கு முன் சம்பவிக்க படவேண்டியதே..இன்றைக்கு நாம் மரித்தாலும் நாம் தேவனோடு இருப்போம் என்ற நம்பிக்கை இருக்கும்போது நீ ஏன் கலங்குகிறாய்.

நீ இந்த இவ்வுலகத்திற்கு பின்னால் அலைந்தது போதும், கர்த்தரை தேடாமல் வாழ்ந்தது போதும்,இன்றே நீ மனம் வருந்தி கர்த்தருடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்.வேதத்தை அனுதினமும் தியானி.தேவனுடைய பாதத்தில் அனுதினமும் மன்றாடு,திறப்பில் நின்று இந்த தேசத்திற்காய் போராடு.உன்னுடைய கண்ணீர் தேவனுடைய பாதத்தை நனைக்கட்டும்,நினிவேக்காக  பரிதபித்த தேவன் நமக்காகவும் பரிதபிப்பார்.

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். 
ஏசாயா 43:1

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. 
ஏசாயா 43:2

நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர், உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். 
ஏசாயா 43:3

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய், நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும் உன் ஜீவனுக்குஈடாக ஜாதிகளையும் கொடுப்பேன். 
ஏசாயா 43:4

பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன், நான் உன் சந்ததியைப் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். 
ஏசாயா 43:5

கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள். 
ஏசாயா 43:8

சகல ஜாதிகளும் ஏகமாய்ச்சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும், இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும். 
ஏசாயா 43:9

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. 
ஏசாயா 43:10

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. 
ஏசாயா 43:11

நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன், உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன்இல்லை, நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
ஏசாயா 43:12

நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன், என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை, நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 
ஏசாயா 43:13

நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். 
ஏசாயா 43:14

நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். 
ஏசாயா 43:15

சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, 
ஏசாயா 43:16

இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்து கிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: 
ஏசாயா 43:17

முந்தினவைகளை நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 
ஏசாயா 43:18

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 
ஏசாயா 43:19

நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். 
ஏசாயா 43:20

 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். 
ஏசாயா 43:21

Download our daily bread app on below link.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post