வெளிப்பாட்டின் ஆறாவது முத்திரை

ஆறாவது முத்திரை- பரலோக அறிகுறிகள் மற்றும் அதிசயங்கள்.

அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன், இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று. 
வெளிப்படுத்தின விசேஷம் 6:12

அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. 
வெளிப்படுத்தின விசேஷம் 6:13

வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. 
வெளிப்படுத்தின விசேஷம் 6:14


இந்த ஆறாவது முத்திரையை இயேசு கிறிஸ்து மத்தேயு 24: 29 ல் விளக்குகிறார்.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
மத்தேயு 24:29

யோவேல் 2: 30,31-ல் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டவற்றையும் நீங்கள் படிக்கலாம்.வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
யோவேல் 2:30

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
யோவேல் 2:31

இந்த அறிகுறிகள் உபத்திரவத்தின் முடிவைக் குறிக்கின்றன மற்றும் கடவுளின் கோபத்தின் ஆண்டான கர்த்தருடைய நாளின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இவை உலகத்தை உலுக்கும் நிகழ்வுகள். இயேசுவின் மற்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதைப் போலவே, இவைவும் நடக்கும்!

பூமி அதிர்ச்சி

"பூமி மிகவும் அதிர்ந்தது" என்ற வசனம் உலகமெங்கும் அரசியல் ரீதியாகவும் , சமூக ரீதியாகவும், சமய ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் கடைசி நாட்களில் ஏற்படப் போகும் திடீர் மாற்றங்களையும் அதனால் உண்டாகும் அழிவையும் குறிப்பிடுவதாக சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பூமி அதிர்ச்சியை தேவனிடமிருந்துவரும் நியாயத்தீர்ப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம். (ஆமோ 1:1 : சக 14:5 ; மத் 27:5 : 28:2 ; அப் 16:26 ) நியாயப்பிரமாணத்
தை வழங்கும்படியாக தேவன் சீனாய் மலையில் வந்திறங்கின போது "மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது" (யாத் 19:18) வெளிப்படுத்தின விஷேசத்தில் கீழ்க்கண்ட நான்கு சம்பவங்களின் போது பூமியதிர்ச்சி குறிப்பிடப்படுகிறது.


சூரியன் இருளடைந்தது

தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள்" (யாத் 10:21அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். 

எகிப்தில் உண்டாயிருந்ததை அறிவோம். கிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிய போது "பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று" என்று மத் 27:45 -ல் வாசிக்கிறோம். கர்த்தரின் நாளில் "சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்". ( ஏசா 13:10) என்றும் வாசிக்கிறோம். "சூரியனை மேகத்தினால் மூடுவேன்" ( எசே 32:7 ) என்கிறார் தேவன். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான்கு தடவை சூரியன் இருளடைகிறது.

சந்திரன் இரத்தமாக மாறும்

"சந்திரன் இரத்தம் போலாயிற்று" என்று பார்க்கிறோம். சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில் சந்திரன் வெளிச்சம் தர முடியாது.சூரியன் அந்தகாரப்படும் நான்கு முறையும் சந்திரனும் பாதிக்கப்படுவது அறிவிக்கப்படுகி
றது . "கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்". ( அப் 2:20 ; யோவே 2:31) என்று சொல்லப்பட்டுள்ள
தை அறிவோம். "சூரியனும் சந்திரனும் இருண்டு போகும் , நட்சத்திரங்கள் ஒளி மங்கும்" (யோவே 3:15) .

நட்சத்திரங்கள் விழுந்தன

வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். 
மாற்கு 13:25

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது, அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 
வெளிப்படுத்தின விசேஷம் 8:10

ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன், அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 
வெளிப்படுத்தின விசேஷம் 9:1

வானம் சுருட்டப்பட்டது

ஏசாயா 34:4 - வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
ஏசாயா 34:5 - வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது, இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ் செய்ய இறங்கும்.
ஏசாயா 34:6 - போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒருயாகமும், ஏதோம் தேசத்திலே மகா சங்காரமும் உண்டு, கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது, ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
ஏசாயா 51:6 - உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள், வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்து போவார்கள், என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும், என் நீதி அற்றுப்போவதில்லை. 

மலைகளும்தீவுகளும் அகன்று போயின

அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று. இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். 

எபிரேயர் 12:26

ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், 
சங்கீதம் 46:2

அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) 
சங்கீதம் 46:3

ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது, அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. 
சங்கீதம் 46:6.

இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தேவன் வருகை சமீபம் என்று நாம் அறிகிறோம்.

தேவன் நமக்கு கிருபையின் காலத்தைக் கொடுத்திருக்கிறார். மனந்திரும்புவதற்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். கிருபையின் காலத்தில் நாம் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் கிருபையின் காலத்தை அசட்டை செய்துவிடக்கூடாது.

கிருபையின் காலத்தைத் தொடர்ந்து தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பின் காலம் வரப்போகிறது. அப்போது தேவன் என்னுடைய நீதியை மாத்திரம் வெளிப்படுத்துவார். தம்முடைய கிருபையைக்
காண்பிக்க மாட்டேன் தேவனுடைய நியாயத்தீர்ப்பு | நாள், அவருடைய கோபாக்கினையின் மகா நாளாக இருக்கும் அந்த நாளில் அவருடைய கோபத்திற்கு முன்பாக யாராலும் நிலைநிற்க முடியாது

கிருபையின் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். கிருபையின் காலத்தை அசட்டை செய்து விட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் தண்டிக்கப்படுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியாகவே இருக்கும் அவருடைய கோபாக்கினையும் நீதியாகவே இருக்கும்.

மேற்கூரிய நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டது .அவருடைய வருகை சமீபம்.

மனம் திரும்புங்கள்.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post