காணிக்கை இருந்தால் போதும்.



காணிக்கை இருந்தால் போதும்.

பொதுவாக இவற்றை பற்றி நான் பேசுவதில்லை.ஆனால் இன்றைய நிலையை பார்க்கும் பொழுது வருத்தமாக உள்ளது,நிறைய திருச்சபைகளில் ஆத்துமாக்கள் குறைவு பட்டு காணப்படுகிறது,ஆனால் நம் சபையிலுள்ள போதகருக்கு இதைக் குறித்த பாரமில்லை,ஆத்தும ஆதாயம் காணப்படவில்லை,இன்னமும் எத்தனையோ ஆத்துமாக்கள் இரட்சிக்க படாமல் இருக்கின்றது.ஆனால் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு,காணிக்கை மட்டும் இருந்தால் போதும் என்று சில போதகர்கள் இருக்கிறார்கள்,திருச்சபைகளுக்கு வந்து செல்லவும் இவர்களுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

கடவுள் திருச்சபையை சுத்தப்படுத்தும் காலம் விரைவில் வருகிறது.

உணர்வடையுங்கள் கர்த்தருக்கு என்று ஊழியம் செய்யுங்கள்.

 காணிக்கைகள்.

1.ஓய்வுநாள் காணிக்கை
2.தசமபாக காணிக்கை
3.ஆலய கட்டுமான காணிக்கை
4.ஆலய பிரதிக்ஷ்டை காணிக்கை
5.ஆலய பராமரிப்பு காணிக்கை
6.பண்டிகை காணிக்கை
7.நன்றி பலி காணிக்கை
8.புது வருட காணிக்கை
9.கன்வென்ஷன் காணிக்கை
10.ஒரு நாள் வருமான காணிக்கை
11.அறுவடை திருநாள் காணிக்கை
12.அறுவடை திருநாள் பரிசு சீட்டு
13.ஹார்வெஸ்ட் டொனேஷேன்
14.கடைசி காசு காணிக்கை
15.என் சபை என் பங்கு காணிக்கை
16.பிறந்தநாள் காணிக்கை
17.திருமண நாள் காணிக்கை
18.திருவிருந்து காணிக்கை
19.பத்திரிக்கை ஊழிய காணிக்கை
20.தொலைக்காட்சி ஊழிய காணிக்கை
21.கிராம ஊழிய காணிக்கை
22.ஞாயிறு பள்ளி ஊழிய காணிக்கை
23.வாலிபர் சங்க காணிக்கை
24.பெண்கள் சங்க காணிக்கை
25.ஆண்கள் சங்க காணிக்கை
26.பிரேயர் ஸெல் காணிக்கை
27.தர்ம பண காணிக்கை
28.மிஷ்னரி தாங்கும் காணிக்கை
29.சுவிசேஷே ஊழிய காணிக்கை
30.மாதாந்திர சப்ஸ்கிரீப்சன்
31.உற்சாக காணிக்கை
32.புவர் ஹெல்ப் காணிக்கை
33.கேரல் ரௌன்ட்ஸ் காணிக்கை
34.வீடு சந்திப்பு காணிக்கை
35.ஆலய நிலம் வாங்க காணிக்கை
36.பொருத்தனை காணிக்கை
37.ஞானஸ்தான காணிக்கை
38திடப்படுத்தல் காணிக்கை
39.ஓலை கூறுதல் காணிக்கை
40.கல்யாண காணிக்கை
41.பிள்ளை பிரதிஷ்டை காணிக்கை...
42.கல்லறை காணிக்கை...
43.அடக்க ஆராதனை காணிக்கை..
44.முதல் சம்பள காணிக்கை..
45.பணி ஓய்வு காணிக்கை..
46. பிடி அரிசி காணிக்கை..

- இப்படி எத்தனை காணிக்கை கொடுத்தாலும், பரிசுத்தமாய் வாழும்படி, தேவனுக்கு நம்மைத் தருவதே உகந்த காணிக்கையாகும்!

மக்கள் தவறான போதனைகளால் ஈர்க்கப்படவும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் காரணம் வேதத்தை வாசிப்பது தியானிப்பது கைக்கொள்வது இவர்களுக்கு கஷ்டம்..100 க்கு 60 % காணிக்கை அவர்களுக்காம் திருச்சபைக்கு 40 % புகழ்பெற்ற பாரம்பரிய திருச்சபை ஒன்றில் நடக்கும் அவலம் இது .காணிக்கை கொடுக்கவில்லை என்றல் திருச்சபை அங்கத்தினர் என்ற உரிமையை ரத்து செய்வர்களாம் நல்லது கேட்டதுக்கு வரமாட்டார்களாம் குடும்பங்கள் பிருந்துசென்றல் பிரச்சனையில்லையாம் காணிக்கைதான் முக்கியமாம் ,விசுவாசிகள் இல்லையென்றாலும் கலெக்ஷன்  முக்கியமாம் ஆத்துமாக்கள் முக்கியமல்ல துட்டு முக்கியமாம் ..போதகர் வந்து போனால் DA 500 ருபாய் கொடுக்கவேண்டுமாம் , எப்படியாக திருச்சபைகள் சென்றுகொண்டு இருக்கிறது ..ஆண்டவருடைய வருகை சமீபம் அவர் எரிச்சலுள்ள தேவன் ,,மனந்திரும்பி தேவனுடைய கோபாக்கினைக்கு தப்பித்துக்கொள்ளுங்கள் .

Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post