மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம்.

மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம். 

நன்மையான எந்த ஈவையும் நமக்கு பரத்திலிருந்து பிதாவின் மூலம் பெற்று தந்த தேவ குமாரனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

அப்போஸ்தலர் 28:1-6
பரிசுத்த வேதாகமத்திலுள்ள 
மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம். அப்போஸ்தலனாகிய 
பவுலும் காவல்பண்ணப்பட்டவர்களும் சிறை கைதிகள் என்று அறிந்திருந்தும் மெலித்தா தீவில் இருந்த ஜனங்கள் பாராட்டின  அன்பு  மிக அதிகமாய் இருந்தது. தேவையானவற்றை தானாக முன்வந்து  கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தார்கள். 

ஆனால் பவுலின் கையில் பாம்பையும் அது அவன் கையை கவ்விக் கொண்டதைக் கண்டதும், இந்த குணம் சற்று நேரத்திலேயே மாறி போனது. 

கொலைபாதகன் என்று அவரை இழந்தார்கள். அந்த எதிர் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்காமல், பவுல் – சும்மாயிருந்தார்.

ஆனால் – பாம்பினால் எதுவுமே நடக்காமல் பவுல் சுகமாய் இருந்ததை பார்த்ததும் - அதே கூட்டம் அவரை கடவுள் என்று போற்றினது !! (அப் 28:1-7)

சுற்றத்தாரை பார்த்து, சொந்த குணத்தை கெடுத்து கொள்ளாதீர்கள். ஊர் - போற்றும், தூற்றும், உயர்த்தும், தாழ்த்தும், புகழும், இகழும். தேவனை முன்பாக வைத்து ஜீவியம் செய்யுங்கள். அவரே உங்கள் முன்மாதிரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post