போதகர்கள் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது


போதகர்கள் உணரவேண்டிய காலம் வந்துவிட்டது.

போதகர்களே, நாம் அழவேண்டிய, புலம்பவேண்டிய, உணரவேண்டிய காலம் வந்துவிட்டது. எல்லா தேசங்களிலும் அனைத்து சபைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், போதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்

பிதாவே, எங்கள் ஆண்டவரே

1. போதகர்களாகிய எங்களில், மனிதாபிமானமற்ற துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும்.

2. போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும்.

3. போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும்.

4. போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும்.

5. போதகர்களாகிய நாங்கள், ஒருவரையொருவர் பகைத்து சகோதர அன்பை இழந்திருந்தால் மன்னியும்.

6. போதகர்களாகிய எங்களில், சுவிசேஷபாரம் குறைந்து, சுவிசேஷ ஊழியத்தை அலட்சியப் படுத்தியிருந்தால்  மன்னியும்.

7. போதகர்களாகிய நாங்கள், சுவிசேஷக் காரியமாக காணிக்கைகளைச் செலவு செய்யாதிருந்தால் மன்னியும்.

8. போதகர்களாகிய நாங்கள், சபை வெறியையும், ஜாதி வெறியையும் காண்பித்திருந்தால் மன்னியும்.

9. போதகர்களாகிய நாங்கள், கிறிஸ்துவை விட சபையையும், சபை மக்களையும், காணிக்கையையும் மதித்திருந்தால் மன்னியும்.

10. போதகர்களாகிய நாங்கள், சுயநலத்துக்காக சபையில் தேவையற்ற சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தால் மன்னியும்.

11. போதகர்களாகிய நாங்கள், பிரசங்கப் பீடத்தை தேவநடத்துதலின்படி பிறருக்கு விட்டுக் கொடுக்காத நிலையை மன்னியும்.

12. போதகர்களாகிய நாங்கள், சபையின் வருமானத்தை பிழைப்பிற்குரிய வழியாக எண்ணியிருந்தால் மன்னியும்.

13. போதகர்களாகிய நாங்கள், சபைகள் மூடியிருக்கும் நிலையிலும் எங்கள் குறைகளை உணராதிருந்தால் மன்னியும்.

14. போதகர்களாகிய எங்களுக்குள், ஆவிக்குரிய பெருமை, பாஸ்டர் என்கிற ஆணவம் வந்திருந்தால் மன்னியும்.

15. போதகர்களாகிய நாங்கள், அதிகாலை ஜெபத்தை முக்கியப்படுத்தாமல் தூங்கியிருந்தால் மன்னியும்.

16. போதகர்களாகிய நாங்கள், சபை பதவிகளைப் பிடிக்க சூழ்ச்சி செய்திருந்தால் மன்னியும்.

17. போதகர்களாகிய நாங்கள் பட்டங்களையும், பதவிகளையும் முன்னிறுத்தி எங்களைப் பெருமைப்படுத்தியிருந்தால் மன்னியும்.

18. போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபை, எங்கள் ஸ்தாபனம், எங்கள் சபை மக்கள் என சுயமாக உரிமைப் பாராட்டியிருந்தால் மன்னியும்.

19. போதகர்களாகிய நாங்கள், வேதவசனத்தை சுயநலத்துக்காக கலப்படமாகப் புரட்டி பேசியிருந்தால் மன்னியும்.

20. போதகர்களாகிய நாங்கள், சபையிலுள்ள ஏழைகளை, திக்கற்றவர்களை, விதவைகளை உண்மையாய் விசாரிக்க மனமற்று இருந்திருந்தால் மன்னியும்.

21. போதகர்களாகிய நாங்கள், தவறான உறவு முறைகளை ஊக்குவிக்கவும், விவாகரத்துக்களை ஆதரிக்கவும் செய்திருந்தால் மன்னியும்.

22. போதகர்களாகிய நாங்கள், கர்த்தருடைய உபதேசத்தைக் காண்பிக்காமல், எங்கள் வியாக்கியானங்களைப் பெருமைக்காக வெளிப்படுத்தியிருந்தால் மன்னியும்.

23. போதகர்களாகிய நாங்கள், உபவாசங்களை மறந்து ஆகார மோகத்திற்கும், தியாகங்களை மறந்து உல்லாசத்திற்கும் இடம் கொடுத்திருந்தால் மன்னியும்.

24. போதகர்களாகிய நாங்கள், காணிக்கைப் பணத்தை தேவையுள்ள பிற ஊழியங்களுக்கு கொடாமல், எங்கள் சுயநலத்திற்காக செலவழித்திருந்தால் மன்னியும்.

25. போதகர்களாகிய நாங்கள், எங்களுக்குரிய தசமபாகத்தை எங்கள் ஸ்தாபனத் தலைமைக்கு, அப்போஸ்தல ஊழியங்களுக்கு கொடுக்காமல் திருடியிருந்தால் மன்னியும்.

26. போதகர்களாகிய நாங்கள், கடைசிக்காலம் என்பதை மறந்து பெருமைக்காக கட்டிடங்களை கட்டவும், நிலங்களை வாங்கிக் குவிக்கவும் துணிகரம் கொண்டிருந்தால் மன்னியும்.

27. போதகர்களாகிய நாங்கள், சபையை உற்சாக மனதோடும், ஆவியானவர் நடத்துதலின்படியும் நடத்தாதிருந்தால் மன்னியும்.

28. போதகர்களாகிய நாங்கள், ஆவியானவர் தந்தருளும் வார்த்தைகளுக்குக் காத்திராமல் சுயமாய் ஆயத்தம் செய்து பிரசங்கித்திருந்தால் மன்னியும்.

29. போதகர்களாகிய நாங்கள், சுயநலத்திற்காக, ஆதாயத்திற்காக தகுதியில்லாத நபர்களுக்கு சபைப் பொறுப்புகளை வழங்கியிருந்தால் மன்னியும்.

30. போதகர்களாகிய நாங்கள் சுவிசேஷ ஊழியர்களை, எங்கள் காணிக்கைகளை திருடுகிறவர்களாக, சபைக்கு எதிரானவர்களாக, அழைப்பில்லாதவர்களாக அற்பமாய் பேசி அலட்சியப்படுத்தியிருந்தால் மன்னியும்.

31. போதகர்களாகிய நாங்கள், எங்கள் குடும்பங்களை நன்றாய் விசாரிக்காமலும், எங்கள் பிள்ளைகளை நல் ஒழுக்கத்தில் வளர்க்காமலும், எங்கள் உறவுகளை மதியாமலும் இருந்திருந்தால் மன்னியும்.

32. போதகர்களாகிய நாங்கள், எங்கள் மனைவியை கனப்படுத்தாமலும், மனைவிக்கு உண்மையாயிராமலும் துரோகம் செய்திருந்தால் மன்னியும்.

33. போதகர்களாகிய நாங்கள், உண்மையான அர்ப்பணிப்புள்ள உடன் ஊழியர்களை உருவாக்காமல் மனமற்று இருந்திருந்தால் மன்னியும்.

34. போதகர்களாகிய நாங்கள், எங்கள் சுயநலத்திற்காக சபையின் வளர்ச்சியை, சபையின் ஒற்றுமையை கெடுத்திருந்தால் மன்னியும்.

35. போதகர்களாகிய நாங்கள், பிரசங்க பீடத்தில் நின்று மாம்ச எழுச்சி கொண்டு, அடாவடித்தனமாகப் பேசியிருந்தால் மன்னியும்.

36. போதகர்களாகிய நாங்கள், சபையில் ஒரு சிலரை எங்கள் ஆதரவாளர்களாகவும், ஒரு சிலரை எங்கள் எதிராளிகளாகவும் நினைத்து பாகுபாடு காண்பித்திருந்தால் மன்னியும்.

37. போதகர்களாகிய நாங்கள், சபை மக்களை கடினமாய், இறுமாப்பாய், வெறுப்பாய் ஆளுகை செய்திருந்தால் மன்னியும்.

38. போதகர்களாகிய நாங்கள், மனிதர்களால் வந்த உபத்திரவங்களால், பிசாசின் போராட்டங்களால், பொருளாதார கஷ்டங்களால் சோர்ந்து போயிருந்தால் மன்னியும்.

39. போதகர்களாகிய நாங்கள், ஆதியில் கொண்டிருந்த தரிசனங்களை, வைராக்கியத்தை, கண்ணீரின் ஜெபத்தை இழந்திருந்தால் மன்னியும்.

40. போதகர்களாகிய நாங்கள், நன்றியை மறந்த மனிதர்களால், சரீர பெலவீனங்களினால், பல வித தடைகளினால் மன மடிவாகியிருந்தால் மன்னியும்.

41. போதகர்களாகிய நாங்கள், தேவ பிரசன்னத்தை ஆராதனையில் முக்கியப்படுத்தாமல் இசையை, ஒலிபெருக்கியை, விளக்குகளை சார்ந்திருந்தால் மன்னியும்.

42. போதகர்களாகிய நாங்கள், செல்போனை கம்ப்யூட்டரை தவறான நோக்கத்திற்க்காக பயன்படுத்தியிருந்தால் மன்னியும்.

43. போதகர்களாகிய நாங்கள், சபையை கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்று சாட்சியை இழந்திருந்தால் மன்னியும்.

44. போதகர்களாகிய எங்கள் நாவில் பொய், இரண்டக பேச்சு, தூஷணம், வம்பு, புத்தியீன பேச்சு புறப்பட்டிருந்தால் மன்னியும்.

45.  போதகர்களாகிய நாங்கள்,  பரிசுத்தவான்கள் என்பதை மறந்து இழிவான, கேவலமான, அருவருப்பான ஆசை இச்சைகளுக்கு இடம் கொடுத்திருந்தால் மன்னியும்.

நாம் சுத்திகரிக்கப்பட்டால்  கொரோனா வைரஸ் பரவாமல் தேசம் பாதுகாக்கப்படும்

சீக்கிரமாய் சபைகள் திறக்கப்படவும், சபைகள் வளர்ச்சியடையவும், சபைகள் மூலம் எழுப்புதல் உண்டாகவும், சபையை ஆண்டவர் வருகைக்கு ஆயத்தப்படுத்தவும், சபை பாகுபாடின்றி போதகர்களாகிய நாம் மனஸ்தாபப்பட்டு ஜெபிப்போம், சீர்ப்படுவோம்.

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2:1

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2 பேதுரு 2:2

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
2 பேதுரு 2:3

அன்பான போதகர்களே, தயவு செய்து இந்த ஜெபக்குறிப்புகளை, உங்கள் போதகர், நண்பர்களுக்கு forward செய்யுங்கள்.

Download our daily bread app on below link.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post