அடுத்து நான் என்ன செய்வேன்?
நம்பிக்கை அற்ற நிலை!
எதிர்காலங்களைப் பார்த்தப்போது....இனிமேல் உலகில் நடக்க இருக்கும் தாறுமாறான அநீதிகள் நிறைந்திருக்கும் சுழற்ச்சியில் நான் தாக்குப்பிடித்து வாழமுடியுமா?
இந்த உலகம் பொல்லாதவர்களின் கூடாரமாகிவிட்டதே!
இரக்கமும் நீதியும் அசட்டை செய்யப்பட்டு ஞானம் கூப்பாடு ப்போடுகிறதே!
அடுத்து வர இருக்கும் தேவனுடைய கரம் துன்மார்க்கர்களை பலமாய் அழிக்கும்போது..துன்மார்க்கர்கள் இன்னும் நம்மை அநீதியாக நடத்துவார்களே...
வர இருக்கும் கொடிய தீங்கு நாட்காளில் என் குடும்பத்தை எப்படி பாதுகாப்பேன்..இவ்வாறு புலம்பும் ஆத்துமாவே....கேள்!
இஸ்ரவேலர்கள் கூப்பாடு போட்டுத்தான் தேவனை நோக்கி கதறினார்கள்.தேவன் அவர்களை விடுதலையாக்க மோசேயை அனுப்பினபோது..பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்து....இன்னும் அதிகமாக இஸ்ரவேலர்களை கொடுமைப்படுத்தினான்.அதுபோல....தேவன் உன்னை விடுவித்து நித்தியத்துக்குள் வழிநடத்த விரும்ப தன் கரத்தையே நீட்டுகிறார்...இதை அறிந்த சாத்தான் நிச்சயமாகவே உன்னைப்போன்ற எல்லோருடைய வாழ்கையை இன்னும் கடினமான சூழ்நிலைக்கு நேராக வைப்பான்..
மோசேயை அன்று எதிர்த்த கூட்டத்தில் அநேகர் முறுமுறுத்து தேவனால் அழிக்கப்பட்டனர்.அதுபோல இன்றய கடினமான சூழ்நிலையைக் கண்டு நீ முறுமுறுக்காதே!
இஸ்ரவேலர்கள் பயனத்தை உனக்கு தேவன் மாதிரியாக வைத்து...அதில் இருந்து நீ கற்றுக்கொள் என்கிறார்...
எப்படி இஸ்ரவேலர்களை நான் நடத்தி வந்தேனோ அவ்வாறே...உங்களை இந்த பூமியில் இருந்து நித்தியத்துக்கு கூட்டிச்செல்வேன் என்று தேவன் கூறுகிறார்...
ஆகையால் இனிமேல் தேவனுடைய வலதுகரம் உனக்கு துன்பத்தை தந்த சத்துருவுக்கு விரோதமாக அவனுடைய ஊழியர்களின் மேல் பலமாக இரங்கும்.
பூமி தத்தளிக்கும் .அவர் சத்தமிடுவார்...மலைகள் குற்றுகள் நடுங்கும்....
அவருடைய பழிவாங்குதல் நாட்கள் வர இருக்கிறது அதுவரை நீ தேவனை சார்ந்துக்கொண்டு மனரம்மியமாக இரு...
என்ன நடக்குமோ என்று நம்பிக்கையற்றவனைப்போல புலம்பாதே!....
அவர் உன்னை சத்துருவின் கைக்கு மறைத்து காப்பேன் என உறுதி அளிக்கிறார்...
துன்மார்க்கர்களுக்கு வரும் தீங்கில் சிக்கிக்கொள்ளாதபடி அவர் உனக்கு என்ன கட்டளையை கூறுகிறாரோ அதை மாத்திரம் பற்றிக்கொண்டு... அமைதலாக இரு...
உன் சுயத்தின்படி நீ நடந்து தேவனுடைய கட்டளையை மதிக்காமல்...போவாயானால்...துன்மார்க்கர்களுக்கு கொடுக்கும் கோபாக்கினையில் நீயும் அகப்பட்டு அழிவை சந்திக்கும் நிலை உண்டாகும்...ஆகையால்...நீ உன்னை தாழ்த்தி..பொறுமையாக இந்த கொடிய தீங்கு நாளில் தேவன் உன்னை காக்கும்படி அவருடைய பலத்த கரத்துக்குள் அடங்கி இருந்து..அவர் கூறும் நிபந்தனைகளை கைக்கொள்.அப்பொழுது பிழைப்பாய்.
உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.
ஏசாயா 50:10
Follow us on
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
https://perfectioninjesuschrist.blogspot.com
Click below link to download our dailybread app.
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Post a Comment