தன்னைப்போல் பிறனை நேசி


தன்னைப்போல் பிறனை நேசி

தன்னைப்போல் பிறனை நேசிப்போர் நிச்சயமாக இவ்வுலகில் சுகபோகமாகவோ,உலக சந்தோசமாக களியாட்டுகளில் தன் கவனத்தை செலுத்த முடியாது...ஏழைகள் படும் துன்பங்கள்,பசி,வேதனை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,வாய் பேச முடியாத ஜீவன்கள் பசியால் அலைவதையும், பார்த்தப்பின்பு எப்படி இவ்வுலகில் சந்தோசப்படமுடியும்???
மோசே இஸ்ரவேல் ஜனத்தை நேசித்தார்.. அதனால் பார்வோனின் அரண்மனை வாழ்கையை அவர் உதறி தள்ளி தான் நேசித்த மக்களுடன்  துன்பங்களை அனுபவிக்க தெரிந்துக்கொண்டார்.

பவுல் கூட ஒருமுறை திமொத்தேயு வை தீங்கனுபவி என்கிறார்..

உன்மையில் பிறனை நேசித்தோமானால் நம்மால் இவ்வுலகில்... பிறர் படும் துன்பத்தை நாம் உணர்கிறவர்களாக ஆவியில் நிச்சயம் கலங்குவோம்.
அதன் வலி மிக கஸ்டமாக இருக்கும்.

தேவ்வனுடைய அன்பை பெற்ற
நமக்கே அவ்வாறு இருந்தால்...

தேவனுக்கு எவ்வாறு இருக்கும்...
அவர் தாமதிக்கிறார் என்றால்...ஒருவரையும் கைவிடாமல் எல்லோரையும் காப்பாற்றனும் என்பதாகத்தான் இருக்கமுடியும்.

அவர் தேவனாக இருப்பதால் மாயையும் நிஜத்தையும் வேறுபிரித்து பார்த்து...தன் திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்...

நாம் மாயைக்குள்ளாக இருந்து பிறர் படும் துயரங்களைப் பார்த்து தாங்கொன்னா வேதனை அடைகிறோமோ என்று எண்ணும்போது...

தேவன் கூறுகிறார்...
நானே உங்கள் ஜீவனாக இருக்கிறேன்.. உங்களுக்குள் இருந்து இந்த வியாகுலப்படுகிறது நானே...அதை உங்கள் மனது புரிந்துக்கொண்டு துயரப்படுகிறது.என்றார்.

எத்தனை உண்மை!

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post