விசுவாச துரோகம்!

 


விசுவாச துரோகம்!

Like and Follow our Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

விசுவாச துரோகம்!

கர்த்தரை நம்பும் விசுவாசத்திலிருந்து விலகி விழுந்துவிடுவது விசுவாச துரோகம் என்று அழைக்கப்படுகிறது.

இஸ்ரவேல் தேசத்தார் பலமுறை தங்கள் விசுவாசத்திலிருந்து விலகி கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப் போயிருக்கிறார்கள். (எரேமியா 5:6)

இவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று எரேமியா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார்.

உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
(எரேமியா 2:19)

கர்த்தர்மீது வைத்திருந்த விசுவாசத்தை விட்டு விலகிப் போனவர்களுக்கு எடுத்துக்காட்டுக்களாக வேதாகமத்தில் பலரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருசிலரின் விவரம் வருமாறு:

1. சவுல் ராஜா- இவன் கர்த்தரைவிட்டுத் திரும்பி கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான். (1சாமுவேல் 15:11)

2. இமெனேயும், அலெக்சந்தரும்- இவர்கள் விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். (1தீமோத்தேயு 1:19-20)

3. தேமா- இவன் இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, பவுலைவிட்டுப் பிரிந்து போனான். (2 தீமோத்தேயு 4:10)

புறஜாதியார் மத்தியில் வாசம்பண்ணிய யூதர்களை அப்போஸ்தலர் பவுல் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதித்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்தினார்கள். (அப்போஸ்தலர் 21:21)

கிறிஸ்துவின் நாளைக் குறித்து, அப்போஸ்தலர் பவுல் எழுதும் போது, விசுவாசத்துரோகம்" முந்தி நேரிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்போது கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பாடுவான். (2தெசலோனிக்கேயர் 2:3)

ஒரு கிறிஸ்தவ விசுவாசி கிறிஸ்துவையும், அவருடைய உபதேசங்களையும் வேண்டுமென்றே தீர்மானமாக மறுதலித்து, கிறிஸ்துவையும், அவருடைய உபதேசத்தையும் விட்டுப் பின்வாங்கிப் போவது விசுவாசத் துரோகம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. (எபிரெயர் 10:26-29 ; யோவான் 15:22)

விசுவாசத் துரோகம்_* என்பது வேறு. தவறான விசுவாசம்_* என்பது வேறு. தவறான விசுவாசம் ஜனங்களுடைய அறியாமையினால் உண்டாவது. ஆனால், விசுவாசத் துரோகம் தெரிந்தும் வேண்டுமென்றேயும் கர்த்தரை விசுவாசியாமல் இருப்பது.

Follow us on

Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post