உபவாசம் மிகவும் அவசியம்
Daily Bread
Daily Bread
Like and Follow our Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
https://www.facebook.com/perfectionInJesusChrist/
உபவாசம் மிகவும் அவசியம்
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 9:27
1 கொரிந்தியர் 9:27
என் சரீரத்தை கீழ்ப்படுத்துகிறேன் என்று வெறுமென எழுதாமல் *சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறேன்* என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார். அப்படியானால் *சரீரத்தை ஒடுக்காமல் இதைக் கீழ்ப்படுத்துவதென்பது கடினமான ஒன்று* என்பதை மறைமுகமாக சுட்டி காட்டுகிறார். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தங்களுடைய மாம்சமே அவர்களுடைய முதல் எதிரியாக செயல்படுகிறது.
என்னதான் நாம் ஜெபவாழ்க்கையிலும் வேத தியானத்திலும் சரியாக இருந்தாலும் சில சமயங்களில் இந்த மாம்சம் எழும்பி நம்மோடு போராடுவதை மிகவும் தெளிவாக காண முடியும். அப்போதெல்லாம் இதை உபவாசம் என்கிற தடியால் இதை அடித்து, ஒடுக்கி தேவனுக்கு முன்பாக தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படுத்த வேண்டும்.
எனக்கு எந்த போராட்டமும் கிடையாது என்று யாராலும் சொல்ல முடியாது.* இந்த மாம்சத்தில் உயிர் இருக்கும் வரை நமக்கு போராட்டம் உண்டு. இந்த போராட்டத்தில் வெற்றி பெற, மாம்சத்தின் கிரியைகளை அழிக்க மற்றும் சாத்தானை மேற்க்கொள்ள உபவாசம் மிகவும் அவசியமாக இருக்கிறது. குறைந்த பட்சம் வாரத்தில் இரண்டு வேளையோ மற்றும் மாதத்தில் மூன்று நாட்களாவது இருக்க முயற்சிக்க வேண்டும். ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும் தேவனோடு இன்னும் கிட்டிச்சேர வேண்டும் போன்ற மேலான நோக்கத்திற்காக ஆவியானவரின் வழிநடத்துதல் படி நாம் உபவாசம் இருந்து ஜெபிக்க வேண்டும்.
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
லூக்கா 2:37
Follow us on
லூக்கா 2:37
Follow us on
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
https://perfectioninjesuschrist.blogspot.com
Click below link to download our dailybread app.
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Send your prayer requests to below mail id and we will pray for you
Post a Comment