பலன்.. (PRODUCE)



பலன்.. (PRODUCE)

பலன் என்றால், விளைச்சல். ஆதாம் பாவம் செய்ததினால், அவன் உயிரோடிருக்கும் நாளளெல்லாம் வருத்தத்தோடே பூமியின் பலனை புசிப்பான் என்று தேவன் சபித்தார் (ஆதியாகமம் 3:17)

அவன் நிலத்தை பயிரிடும்போது அது தன் பலனை இனி அவனுக்குக் கொடாது என்றும் சபித்தார். (ஆதி 4:12)

கர்த்தர் ஆபிரகாமுக்கு கேடகமும் மகா பெரிய பலனுமாக இருந்தார். (ஆதி 15:1)

ஈசாக்கு விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலனடைந்தான் (ஆதி 26:12),

கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறதினால் நமக்கு மிகுந்த பலன் உண்டு (சங்கீதம் 19:11).

தேவரீர் அவனவன் செய்கைக்கு தக்கதாய் பலனளிக்கிறீர் (சங் 62:12).

கர்த்தருடைய கிருபையினால் நம்முடைய தோட்டங்கள் வரத்துள்ள பலனைத் தரும்.. (சங் 107:37)

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:4).

நாம் தேவனிடத்தில் அந்தரங்கமாக ஜெபிக்கும் பொழுது அவர் நமக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார் (மத்தேயு 6:18).

தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை
அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத்தேயு 10:41,42).

கடைசியாக,
மீறுதலின் பலன்
இது கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே
அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது (ரோமர் 5:15).
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், *பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்!(ரோமர் 6:22).

ஆக,
தேவன் அளிக்கும் பலன் பூமியில் தொடங்கி, பரலோகத்தில் நித்தியமாகத் தொடர்கிற ஒன்று!
கிருபையினால் நாம் பலனடைவோம்!
ஆமென்! அல்லேலூயா!

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
Send your prayer requests to below mail id and we will pray for you

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post