உன்னுடைய வீட்டைச்‌ சுத்தம்‌ செய்!



"உன்னுடைய வீட்டைச்‌ சுத்தம்‌ செய்!"

"அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி, அருவருப்பானதை உன்‌ வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச்‌ சீ என்று வெறுத்து முற்றிலும்‌ அருவருக்கக்கடவாய். அது சாபத்திற்குள்ளானது"
(உபா. 7:26).

அநேக பரிசுத்தவான்௧ள்‌, இந்த வசனம்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டியை வீட்டிற்குள்‌ கொண்டுவருவதையும்‌, கணிப்பொறியில்‌ இணையதளம்‌
இணைக்கப்படுதலையும்‌ குறித்து நம்மை நேரடியாக எச்சரிக்கிறது என்று கூறுகிறார்கள்‌. இவைகளிலுள்ள ஆபாசக்‌ காட்சிகள்‌, சரித்திரம்‌ கண்டிராத அளவுக்கு மோசமானவையாக இருக்கின்றன. அநேக படுகொலைகள்‌, ஆண்‌ பெண்‌ சம்பந்தமான முறைக்கேடான குற்றங்கள்‌, கொள்ளையிடுதல்‌, விவாகரத்துக்கள்‌ முதலியவை இந்த 'முட்டாள்‌ பெட்டியின்‌' வாயிலாக ஒளிபரப்பப்படும்‌ நிகழ்ச்சிகளின்‌ காரணமாகவே உண்டாகின்றன என்று புள்ளிவிவரங்கள்‌
தெரிவிக்கின்றன!

ஓர்‌ அருமையான தேவனிதன்‌ ஒரு சிறு வியாபாரம்‌ செய்து தன்‌ குடும்பத்தை நடத்திவந்தார்‌. வறுமை அவரது குடும்பத்தை வதைத்தது. அவர்‌ தன்‌ கஷ்டம்‌ நீங்கும்படி மிகவும்‌ ஊக்கமாக ஜெபித்துவந்தவுடன்‌, தேவ ஊழியர்களின்‌ ஜெப உதவியையும்‌ நாடினார். ஆனாலும்‌ பிரச்சனைகள்‌ நாளுக்கு நாள் மிகவும்‌
அதிகரித்துக்கொண்டேயிருந்தன. 

எனவே அவர்‌ ஒரு அதிகாலை நான்கு மணிக்கு முழங்காற்படியிட்டு, தன்‌ வறுமைக்குக்‌ காரணம்‌ யாது என கர்த்தரிடத்தில்‌
கேட்டுக்கொண்டிருந்தார்‌. அப்போது அவர்‌ ஒரு தரிசனம்‌ கண்டார்‌. அதில்‌ அவருடைய வீட்டைச்‌ சுற்றிலும்‌, வீட்டிற்கு மேலும்‌ அநேக தேவதூதர்கள்‌
நின்றுகொண்டிருந்தனர்‌. 

கறுப்பான ஒரு பெரிய உருவம்‌ அவரது வீட்டினுள்‌ நுழைய முயற்சித்துக்‌ கொண்டிருந்தது. அத்தேவதூதர்களோ அதை வீட்டினுள்‌ நுழையவிடாமல்‌ தடைபண்ணிக்கொண்டிருந்தனர்‌. மறுபக்கத்தில்‌, அவரது வீட்டிலிருந்து ஒரு கயிறு வெளிப்புறமாகத்‌ தொங்கிக்கொண்டிருந்தது. 

அதின்‌
வழியாக அந்தக்‌ கறுத்த பிசாசு அவரது வீட்டை நோக்கி ஏறி வந்துகொண்டிருந்தது. அக்கயிற்றை அவர்‌ உற்று நோக்கியபோது, அது அவருடைய வீட்டிலிருந்த தொலைக்காட்சிப்‌ பெட்டியோடு இணைக்கப்பட்டிருந்த
கேபிள்‌ கம்பி என்பதைக்‌ கண்டுகொண்டார்‌! அக்கறுத்த உருவம்‌ அக்கயிறு வழியாக அவரது வீட்டினுள்‌ நுழைந்து, அவ்வீட்டிலிருந்த தொலைக்காட்சிப்‌
பெட்டியின்‌ மேல்‌ கால்‌ மீது கால்‌ போட்டு அமர்ந்துகொண்டது. அதைக்‌ கண்டு அவர்‌ திடுக்கிட்டார்‌. தேவதூதர்களுங்கூட ஒன்றும்‌ செய்யக்கூடாமல்‌ திகைத்து நின்றனர்‌! 

இத்தரிசனத்தைக்‌ கண்ட அவர்‌ பயந்து நடுங்கினார்‌. தங்கள்‌ குடும்பத்தின்‌ வறுமையின்‌ காரணத்தைக்‌ கண்டு கொண்ட அவர்‌ ஜெபத்தை முடித்து எழுந்து, தொலைக்காட்சிப்‌ பெட்டியை உடனடியாகத்‌ தன்‌ வீட்டிலிருந்து ஒழித்துவிட்டார்‌. இப்போது அவருடைய வீட்டில்‌ தேவன்‌ செழிப்பையும்‌, மகிழ்ச்சியையும்‌, ஆசீர்வாதத்தையும்‌ கட்டளையிட்டிருக்கிறார்‌.

தேவபிள்ளையே, இந்த அருவருக்கத்தக்க மாயப்பெட்டி உன்னுடைய வீட்டில்‌ இருப்பதினிமித்தமே, ஒருவேளை வியாதி, வறுமை, குடும்பத்தில்‌ சண்டைகள்‌ போன்றவை உன்னுடைய வீட்டை விட்டு நீங்காமல்‌ இருக்க கூடும்‌. இன்றே நீ உன்னுடைய வீட்டைச்‌ சுத்தம்‌ செய்வாயாக. சகல கிருபையும்‌ பொருந்திய தேவன்‌தாமே உன்னுடைய இருதயத்தையும்‌ வீட்டையும்‌ சுத்தமாகக்‌ காத்துக்கொள்ள உனக்கு உதவி செய்வாராக.

Follow us on
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
Send your prayer requests to below mail id and we will pray for you

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post