உதவி செய்வதுக்கூட தேவசித்தம் அறிந்து உதவவேண்டும்.
தேவன் ஒவ்வொருடைய வாழ்கையிலும் அவர்களுடைய ஜென்ம சுபாவங்களை அறிந்து பல சூழ்நிலைகளில் வழிநடத்தி மனந்திரும்ப வைப்பார்.
சிலர் சொத்து குவிக்கும் ஆசையுள்ளவர்கள்...சதாகாலமும்...குறைவையே சொல்லிக்கொண்டு...பிறரிடம் உதவியை எதிர்ப்பார்ப்பார்கள்...ஆனால் தங்கள் வருமானத்தால் சொத்துக்களை வாங்கி குவித்துக்கொண்டே இருப்பார்கள்...இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ...மனவிரக்தியை நமக்கு கொண்டுவரும்.
சிலர் கடனுக்கு மேல் கடன் வாங்கி சுகபோகமாக வாழ்வார்கள்...இவர்கள் தன் நிலை அறிந்து சிக்கனமான வாழ்கை வாழவிருப்பமற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்கு மனவிரக்தியே உண்டாகும்.
கெட்ட சுபாவத்தை கைவிடாமல் பிறருக்கு துரோகமே செய்யும் பழக்கமுடையவர்களுக்கு உதவுதல்..நமக்கு நாமே சூனியம் வைப்பதுப்போன்றது.
சதாகாலமும் பிறரை பரியாசம் செய்யும் பழக்கமுடையவர்களுக்கு உதவுதல்.....நமக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொண்டுவரும்.
சதா காலமும் அடுத்தவர்களை குறை கூறுபவருக்கு உதவுதல் என்பது பொத்தல் பையில் தானியம் போடுவதற்கு சமம்...
சோம்பேறிகளுக்கு உதவுகிறது...வீணான காரியம்.
எவ்வித காரணமே இல்லாமல் சோகத்தையும்,தனிமையை விரும்புகிறவர்களுக்கு உதவுதல்....அவர்களை இன்னும் சேம்பலில் தொடரச்செய்யவே வழிவகுக்கும்...இவர்கள் தங்களிடம் இருப்பதை வைத்து தன்நிறைவு அடையவோ,திருப்தியோ அடையமாட்டார்கள்.அனைத்துக்கும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் சுபாவம்.
சதாகலமும் பிறருக்கு சாபம் போட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்ய நினைப்பது....மன சஞ்சலத்திற்கு நம்மை கொண்டுப்போய்விடும்...இவர்கள் சாபமிட காரணமே இல்லாவிட்டாலும்..தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைப்பார்கள்.
நாம் பிறருக்கு....அவர்கள் தேவை அறிந்து தேவ வழிநடத்துதல் மூலம் உதவி செய்வோம் அது மிகுந்த மனதிருப்தியை கொண்டுவரும்.
Follow us on
Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Send your prayer requests to below mail id and we will pray for you
Post a Comment