நான் கட்டின பாபிலோன் என்று நேபுகாத்நேச்சர் சொன்னதை உலக நீதியின்படி பார்த்தால் தவறல்ல ஆனால் தேவநீதியின்படி தவறு..
ஒவ்வொரு பதிவுக்கு கீழ் தன் பெயரை எழுதுகிறவர்களில் எத்தனை பேர் இதை உணர்கிறீர்கள்...?
நம்முடைய திறமை,ஞானம்,புத்தி,எல்லாம் தேவனுடையது.
எந்த நேரத்திலும் நாம் பேச்சு,செயல் அனைத்திலும் மகிமையை தேவனுக்கு செலுத்தும் நோக்கத்திலே இருக்கவேண்டுமே தவிர..பிறர் நம்மை மகிமைப்படுத்தும் நோக்கத்தில் இருக்கக்கூடாது.
நம்மை யாராகிலும் புகழும்போது தேவனுக்கே மகிமை என்பதை நம் இருதயம் சொல்லிக்கொண்டால்
புகழ்ச்சி என்ற சோதனையில் சிக்கமாட்டோம்.
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குக் புடமும் சோதனை: மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
(நீதிமொழிகள் 27:21)
பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
(தானியேல் 4:29)
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
(தானியேல் 4:30)
இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
(தானியேல் 4:31)
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
(நீதிமொழிகள் 10:17)
அதே ராஜா தன்னைத்தான் உயர்த்தினதின் விளைவாக தேவனால் தான் தாழ்த்தப்பட்டதை உணர்ந்தபோது....
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்.
#அகந்தையாய் #நடக்கிறவர்களைத் #தாழ்த்த #அவராலே ஆகும் என்று எழுதினான்
(தானியேல் 4:37)
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)
நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
(கலாத்தியர் 5:25)
வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
(கலாத்தியர் 5:26)
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
(பிலிப்பியர் 4:8)
Follow us on
Websites
Daily bread
https://dailybreadchristian.blogspot.com
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w
Click below link to download our dailybread app.
http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Send your prayer requests to below mail id and we will pray for you
Post a Comment