Anudhina Manna Tamil - உன் துக்கநாட்கள் முடிந்துபோம் - 30-11-17


உன் துக்கநாட்கள் முடிந்துபோம். – ஏசாயா 60:20

உங்கள் வாழ்க்கையில் துக்கம் ஒருபோதும் நீடிந்து கொண்டிருப்பதில்லை. தேவன் இன்றைக்கு அதற்கு ஒரு முடிவை உண்டாக்குகிறார். எனவே உங்களை பார்த்து உன் துக்கநாட்கள் முடிந்துபோம் என்று சொல்லுகிறார். யாபேஸின் வாழ்க்கையில் மிகுந்த துக்கம் காணப்பட்டது. யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.(1நாளா 4:9). யாபேஸ் தேவனை நோக்கி ஜெபித்தான், அன்றே அவனுடைய வாழ்க்கையில் துக்க நாள் முடிந்து போனது. யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்.(1நாளா 4:10). பிள்ளையில்லாத காரணத்தினால் தன் வாழ்க்கை முழுவதும் துக்கத்தோடு இருந்தாள். அவளுடைய துக்கத்திலிருந்து அவளுடைய கணவனால் ஆறுதல் சொல்லமுடியவில்லை. அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான், இவள் அவளை மனமடிவாக்குவாள், அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.(1சாமு 1:7-8). அவள் துக்கத்தோடு கர்த்தருடைய ஆலயத்திற்கு சென்றாள். அங்கு அவள் விண்ணப்பித்து தன்னுடைய இருதயத்தை தேவ சமுகத்தில் ஊற்றினால். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.(1சாமு 1:10-11). தேவன் அன்னாளின் ஜெபத்தை கேட்டாள், அன்றோடு அவளுடைய துக்க நாட்கள் முடிந்தது. அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள், பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய் போஜனஞ்செய்தாள், அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.(1சாமு 1:18). அன்றைக்கு யாபேஸின் ஜெபத்தையும், அன்னாளின் விண்ணப்பத்தையும் கேட்ட தேவன் இன்றைக்கு உங்கள் விண்ணப்பத்தையும் கேட்டு உங்கள் துக்க நாளக்கு ஒரு முடிவை கொண்டுவருகிறார். தேவனுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் துக்கம் வரும், ஆனாலும் அந்த துக்கம் சந்தோஷமாக மாறும். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.(யோ 16:20). உங்கள் வாழ்க்கையில் துக்கம் பலவிதமான சோதனைகளினால் வரலாம். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள், என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.(1பேதுரு 1:5-6). நீங்கள் சோதனைகளினால் துக்கப்படும் போது அது உங்களுக்கு வருங்காலத்தில் சந்தோஷத்தை கொடுக்கும் என்று பொறுமையாக இருந்து சந்தோஷமாக எண்ணுங்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும், அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள், இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.(1பேதுரு 1:7-9). இன்றைக்கு நீங்கள் கடந்து போகும் பிரச்சனைகள் மலை போன்ற துக்கங்களை உங்களுக்கு கொடுக்களாம். இந்து சோதனை நாட்களில் விசுவாசத்தோடு இருந்து, தேவன் உங்களுக்கு இந்த சோதனை நாட்களில் எதை கற்றுக்கொடுக்கப்போகிறார் என்பதை கவனியுங்கள். தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும் காரியங்களுக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுவதை காண்பீர்கள். ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள், பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.(யோ 16:21-22)


அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள், நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். – எரேமியா 31:13

2 Comments

Post a Comment

Post a Comment