இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். - ஏசாயா 43:19
கடன் பிரச்சனை நீங்க எனக்கு ஒரு வழி திறக்கப்படாதா? கர்த்தர் எனக்கு ஒரு மேன்மையை கொடுக்க மாட்டாரா? என்னுடைய வேலையில் எனக்கு உயர்வு கிடைக்காதா? தேவன் எனக்கு ஒரு நன்மை செய்ய மாட்டாரா என்று நீங்கள் புதிய காரியத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு தேவன் புதிய காரியத்தை செய்கிறேன் என்று சொல்லுகிறார். உனக்க விரோதமாய் பலர் எழும்பி உனக்கு வரும் உயர்வை தடுக்க நினைக்கலாம், உனக்கு திறக்கப்படும் பாதைகளை மூடலாம். ஆனால் தேவன் உனக்கு பாதையை தறந்து விட்டால் ஒருவனும் பூட்ட முடியாது. உனக்கு நன்மை வரும் பாதைகளின் திறவுகோல் தேவனிடத்தில் உள்ளது. பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது,(வெளி 3:7). மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.(வெளி 1:18). என்னுடைய வாழ்க்கையில் இப்பொழுது காணப்படுகிற இந்த சூழ்நிலையில் எனக்கு வழிகள் திறக்காது என்று எண்ணுகிறீர்கள் ஆனால் தேவன் உனக்கு வழிகளை திறக்கும்படியாய் புதிய காரியத்தை செய்கிறேன் என்று சொல்லுகிறார். தேவன் செழிப்பான இடத்திலே வழிகளை திறப்பேன் என்று சொல்லவில்லை. வனாந்திரம் போலவும், அவாந்திரம் போலவும் காணப்படும் உன் சூழ்நிலையிலே வழிகளை திறக்கும்படியாய் புதிய காரியத்தை செய்கிறார். நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.(ஏசா 45:2-4). தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்.(மீகா 2:13). ஈசாக்கின் வாழ்க்கையில் தேவன் புதிய காரியத்தை செய்தார். அவன் நாட்களில் தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது அவன் பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். தேவன் அவனை எகிப்துக்கு போக வேண்டாம் அந்த தேசத்திலே தானே அவனை ஆசீர்வதிப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்தார். ஆபிரகாமைப்போல தேவனுக்கு கீழ்படிந்தால் ஆசீர்வதிப்பேன் என்றார். கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்(ஆதி 26:2-5). தேவனுடைய சத்தத்திற்கு சூழ்நிலைகளை பாராமல் கீழ்படிந்தபடியினால் ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டான். ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். (ஆதி 26:12,13). நீங்கள் ஒரு போதும் உங்கள் சூழ்நிலைகளை கண்டு உங்கள் காரியத்திற்கு ஒரு முடிவை கொண்டுவராதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் சூழ்நிலைகளை மாற்றி அதிலே புதிய பாதைகளை திறக்கிறவர். வனாந்திரத்தில் மாத்திரம் அல்ல அவர் அக்கினியின் நடுவிலும் வழிகளை உண்டாக்குகிறவர். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளையிலே தூக்கிபோடப்பட்டபோது அங்கு அவர்களோடு அக்கினியில் உலாவி அக்கினியிலும் புதிய வழியை திறந்தார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான். அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.(தானி 3:23-25).
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். - ஏசாயா 2:3

Thank you Jesus for your living word.
ReplyDeletePost a Comment