அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானவடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷப்பட்டார்கள்.அப். 5:41

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானவடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷ(ப்பட்டார்கள்.அப். 5:41

புதிய ஏற்பாட்டில் சவுல் என்னும் வாலிபனைக் குறித்து நாம் வாசிக்கிறோம். அதிகம் படித்து, வேத சாஸ்திரங்களெல்லாம் கற்றறிந்த அவரிடம் தன்னைக் குறித்து மிகுந்த மேன்மைபாராட்டல்கள் இருந்தன. இயேசுவை ஏற்றுக்கொண்ட ஜனங்களை அடித்து துன்புறுத்தினார். ஆனால் இயேசு கிறிஸ்துவை சந்தித்த பின்னர் அவரது வாழ்க்கை முற்றிலும் மாற்றப்பட்டது. சவுல் பவுலாக மாறினார். பவுல் என்றால் “சிறியவன்” என்று பொருள்படும். பவுல் தான் காண்கிற அனைவருக்கு முன்பாகவும் தன்னைத் தாழ்த்தினார். “பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிகவும் சிறியவன்” என்ற மனநிலை அவருக்கு இருந்தது. தன்னை தாழ்த்தினதினிமித்தம் தேவன் அவரை வல்லமையாய் பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்தி, புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறதற்குரிய கிருபையை அளித்தார். இயேசுவானவரும் தான் பிதாவின் குமாரன் எனக் கூறிக்கொண்டு பெருமையாய் காணப்படவில்லை. மாறாக சிலுவையில் மரணபரியந்தமும் தன்னைத் தாழ்த்தினார். அப்படியென்றால் அவர் பின் செல்ல முடிவெடுத்திருக்கும் நாம் எப்படிப்பட்ட தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேவனுடைய வசனத்தின் வெளிச்சத்தில் மாத்திரமே நமது வாழ்வில் உள்ள பரிசுத்தக் குலைச்சலையும், பெருமையையும் கண்டுகொள்ள முடியும். நம்மில் சிலர் பரிசுத்தத்தில் மிகவும் குறைவுள்ளவர்களாக இருந்து கொண்டு தங்களைக் குறித்துத் தாங்கள் மிகுந்த தாழ்மையுள்ளவர்கள் என்றும் பரிசுத்தமுள்ளவர்கள் என்றும் எண்ணி வஞ்சிக்கப்பட்டுப் போகிறோம்.

நான் மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும், கனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆசை நம்மில் இருக்குமானால் அது இயேசுகிறிஸ்துவின் சிந்தையல்ல, அதிகாலையின் மகனாகிய லூசிபரின் சிந்தையே. ஏனெனில் தான் மேன்மைப்படுத்தப்பட வேண்டும், கனப்படுத்தப்படவேண்டும் என்று ஆதியில் விரும்பினவன் அவனே! பிறரால் தாழ்மைப்படுத்தப்படும்போது நாம் துக்கப்படுவோமானால் அது நமக்குள்ளிருக்கும் பெருமையின் எண்ணத்தைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். ஆனால் கிறிஸ்துவின் ஆவியோ அதற்கு நேர் எதிரானது. பிறர் முன் தாழ்த்தப்படும்போது சந்தோஷப்பட்டு களிகூருவோமானால் மெய்யாகவே கிறிஸ்துவின் ஆவி நம்மில் இருக்கிறது. ஆவியில் நொறுங்குண்டு தாழ்மையோடிருக்கும் மனிதர்களையே தேவன் தேடுகிறார். அப்படிப்பட்டவர்களாக தேவன் உங்களைக் காணமுடியுமா?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post