தேவனைவிட்டு விலகுதல்


தேவனைவிட்டு விலகுதல்

அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். நியாயாதிபதிகள் 16:20

தேவன் சிம்சோனின்மேல் வைத்திருந்த நசரேய அழைப்பிற்கு ஏற்றபடி மரித்த சரீரங்களின் அருகாமை செல்லாமலும், தலை சிரைக்கப்படாமலும், திரட்சை செடியில் உண்டாகிற எதையும் புசியாமல் அற்பணிப்புடன் வாழவேண்டும். ஆனால் சிம்சோன் தான் சிநேகமாயிருந்த தெலீலாள் என்னும் ஸ்திரீயிடம் தன்னுடைய தலை சிரைக்கப்பட்டால் மற்ற மனிதரைப்போல ஆவேன் என்று தன் இருதயத்தை வெளிப்படுத்தினான்.

அவ்வாறே சிம்சோனின் தலை சிரைக்கப்பட்டு பலட்சயமானான். சிம்சோன் இழந்தது தேவன் கொடுத்திருந்த விலைமதிப்பற்ற அபிஷேகத்தைமட்டுமல்ல, தேவனையும்தான்.
இதின் பின்பு சிம்சோனின் வாழ்க்கையில் எத்தனையோ மோசமானவைகள் நடந்திருந்தாலும், அவைகள் எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது எதுவென்றால் தேவன் தன்னைவிட்டு விலகிப்போனதை அவன் அறியாமலிருந்ததுதான்.

பிரியமானவர்களே தேவன் நம்மைவிட்டு விலகிப்போனதை அறியாமல் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதைப்போல் மோசமான நிலை வேறெதுவும் இருக்கமுடியாது. எனவே தேவன் நம்மோடு இருக்கும்படியான வாழ்க்கையை வாழுவோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post