சிறுமையின் நாட்கள்
நானூற்று முப்பது வருஷம் அடிமைத்தனத்திலிருந்து வந்த தன் ஜனங்களுக்காக மோசே செய்த ஜெபம் “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” – (சங்கீதம் 90:15) என்பதே ஆகும்.
தேவன் கொடுத்த நன்மையான வாக்குத்தத்தங்களை மறந்து போகுமளவிற்கு பிரச்சனைகளால் நாம் நாட்கள் சிறுமைப்பட்டிருக்கலாம், சரீர பெலவீனத்தினிமித்தம் நாம் நாட்கள் சிறுமைப்பட்டிருக்கலாம், குடும்ப தேவைகளினிமித்தம் நம் நாட்கள் சிறுமைப்பட்டிருக்கலாம், ஏமாற்றிய உறவுகளின் நிமித்தம் நம் நாட்கள் சிறுமைப்பட்டிருக்கலாம், அழுவதற்கு இனி கண்ணீர் இல்லாத அளவிற்கு நாட்கள் சிறுமைப்பட்டிருக்கலாம், ஏன் சிறுமையின் நாட்கள்… வருஷங்களாக கூட மாறியிருக்கலாம். எத்தனை வருஷங்கள் சிறுமையையும், துன்பத்தையும் நாம் கண்டிருந்தாலும், அதற்கு சரியாகவும், இரட்டத்தனையாகவும் நம்மை ஆசீர்வதித்து மகிழ்ச்சியாக்க சிறியவனை புழுதியிலிருந்து உயர்த்தி ராஜாக்களோடு அமரச் செய்யும் நம் தேவனால் கூடும் என்பதை நாம் மறந்து விடவேண்டாம், நிச்சயம் அவர் நம் சிறுமையை மாறப்பண்ணுவார்
Post a Comment