உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு

உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு- ஆமோஸ் 4-12.

நேற்று ஒரு கிறிஸ்தவ சகோதரனை சந்தித்தேன். 
அவர் ஆவிக்குரிய சபைக்கு செல்கிறார். 
அவர் என்னைப் பார்த்து இந்த வருடம் உங்களுக்கு என்ன "வாக்குதத்த" வசனம் கிடைத்தது பிரதர் என்று கேட்டார். 

அதற்கு நான் எங்கள் சபையில் அப்படி 
"வாக்குத்தத்த" வசனம் கொடுப்பது கிடையாது. வேதத்தில் உள்ள "அனைத்து" வாக்குத்தத்தங்களுமே 
நமக்கு சொந்தம் தான் என்றேன்...!!!

உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு (ஆமோஸ் 4-12) 
இது தான் எனக்கு இந்த வருட "வாக்குத்தத்த" வசனம் என்றேன்..

இந்த வருடம் மட்டுமல்ல, "எல்லா" வருடமும் இந்த வசனம் தான் 
எனக்கு "வாக்குத்தத்த" வசனம் என்றேன்...!!

இன்றைக்கு அநேக சபைகளில் கொடுக்கும் வாக்குத்தத்த வசனங்கள்... 
உலக ஆசிர்வாதம் பற்றியதாகவே காணப்படுகிறது.

இயேசுவின் வருகையை குறித்து சபைகளில் போதிக்கும் ஊழியர்கள்
மிகவும் "குறைவு". அடியேன் செல்லும் சபையின் போதகர் பிரசங்கத்தில்... வருகையை பற்றிய செய்தி "எல்லா" வாரமும் காணப்படும்....!!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

இயேசுவின் "முதல்" பிரசங்கமே மனந்திரும்புங்கள் பரலோக
ராஜ்யம் சமீபித்திருக்கிறது
என்பதே...!!! மத் 4:17

உலக ஆசிர்வாதத்திற்காக கர்த்தரை 
"தேடக்" கூடாது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய  நீதியையும் தேடுங்கள் 
அப்பொழுது இவைகள் எல்லாம் கூடக் 
கொடுக்கபடும். (மத் 6:33)

இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப்பார்க்கிலும்
பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்-1கொரி 15 :19

இயேசுவின் வருகை தான் 
"நமது" குறிக்கோள்/நோக்கம் இயேசு மத்திய ஆகாயத்தில் வரும் போது உயிரோடு இருந்தால் "மறுருபம்" அடைய வேண்டும்.!!! மரித்தால் உயிர்த்தெழ வேண்டும்..!!!

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து  என்னும் இரட்சகர்வர எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
பிலிப்பியர் 3:20. இந்த "எதிர்பார்ப்பு" உனக்கு உண்டா ???

ஒரு உண்மை கிறிஸ்தவனின் எதிர்பார்ப்பு இயேசுவின் இரகசிய வருகை தான்...!!! இதை விட 
இந்த "உலகில்" பெரிய சந்தோஷம் நமக்கு எதுவும் இல்லை...!!!

தேவ ஜனமே... இயேசுவின் வருகையை நினைக்கும் போது உனது "உள்ளம்" சந்தோஷம் அடைகிறதா ???

கர்த்தர் வருகையில் காணப்பட 
"மிகுந்த" "பரிசுத்தம்" தேவை. 
அதற்காக பிரயாசபடுங்கள். "முயற்சி" செய்யுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post