வேதம் வாசித்தீர்களா ?
ஒரு முறை ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒருவர் விலை மதிப்புள்ள அழகிய குடை ஒன்றை வாங்கினார். சில அடிகள் கூட நடந்திருக்கமாட்டார். பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. குடையை எப்படித்திறப்பதெனத் தெரியாமல் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு மழையில் நனைந்து ஓடினாராம். குடையை விற்ற கடைக்காரன் அவருக்குப்பின்னால் ஓடி அந்தக் குடையை விரித்து உபயோகப்படுத்த வழிமுறை சொல்லிக் கொடுத்தானாம். சிரிக்கிறீர்கள் தானே! வேதத்தைக் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோஜனமுமில்லை, ஆயிரமாயிரமான, வாக்குத் தத்தங்கள் சொந்தமாக வேண்டுமென்றால் வேதத்தைத் தியானிக்கிற அனுபவம் வேண்டும் அல்லவா? தியானிக்கத் தெரியவில்லை என்றால் குடையை கையில் வைத்துக் கொண்டு மழையில் நனையும் அனுபவம் தான்.
தியானம் என்றால் என்ன? இடம் கண்டுபிடித்துதனியே மலைகளிலும், குன்றுகளிலும் போய் அமர்ந்து தியானிக்க வேண்டுமோ என்று எண்ண வேண்டாம். எங்கும் ஓட வேண்டாம். சிந்தனையில் வசனங்களை ஓடவிடுங்கள். அதுதான் தியானம். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் வசனங்களை அசைபோடக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் வசனங்களைத் தியானிக்கலாம்.
பஸ்ஸில் பிரயாணம் செய்யும் நேரம், வாக்கிங் சொல்லும் நேரம், பேருந்திற்காய் காத்திருக்கும் நேரம், சமையல் செய்யும் நேரம் என எந்நேரமும் தியானிக்கலாம். அதற்கும் மேலாக டி.வி. க் காகவோ அல்லது செய்தித்தாளுக்கோ நீங்கள் கொடுக்கும் நேரத்தை சற்றுப்பிரித்து, தியானிக்க ஓதுக்குவது உத்தமமாகும். தேவ பிரசன்னத்தை அனுபவிக்கவும் தேவ மகத்துவங்களை புரிந்து கொள்ளவும் சரியான நேரம் இந்த தியான நேரம் அல்லவா! வேகத்திலுள்ள பரிசுத்தவான்கள் எல்லாம் தியானப்புருஷர் தான். இயேசுவும் தியானித்து ஜெபித்தவர்தான். தியானிப்பது கடினம் அல்ல. பிரசங்கம் பண்ணுபவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட வேலையும் அல்ல, "நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்'' -சங்104:34, இனிமையான அனுபவமே தியானிப்பது கடினம் அல்ல. பிரசங்கம் பண்ணுபவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட ஒரு கூட்டம் செய்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவை அறிந்தோர் பலரும் அதற்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையல்லவா. பாக்கியசாலிகளாய் மாற இனி ""வேதத்தைத் தியானிப்பேன்'' என்று இன்று தீர்மானிப்பீர்களா!
Post a Comment