ஆவிக்குரிய சபையை தேர்வுச்செவோம்

Forwaded as received

சிந்தனைக்கு.

ஏலம் விடும்
சபை பாஸ்டர்
--------------------------
சென்ற ஞாயிறு அன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். 

ஆராதனை நடந்து கொண்டிருந்தது..
அறிவிப்பு  நேரம் வந்தது 
பாஸ்டர்  சொன்னார் 

இப்பொழுது கர்த்தருக்கு கொடுக்குற ஆராதனை நேரம் என 

அடடா....
என்ன ஒரு அழகு தமிழ் வார்த்தை...
நாங்கள் *"வியந்து போனோம் !!!

உடனடியாக பாடல் பாடப்பட்டது காணிக்கை கூடை ஏந்தி *"அநேகர்" புறப்பட்டனர்,
அனைவரும் செலுத்தி முடித்தவுடன் பாஸ்டர் அடுத்து கூறினார் 

"நமது சபையில் பிஏ சிஸ்டம்சரியில்லை 
ஆகவே 
நமது சபையை சேர்ந்த ஒருவர் *ரூ-2,50,000* இரண்டரை லட்சம் செலவு செய்து 
இந்த இரு பெட்டிகளையும் வாங்கி கொடுத்துள்ளார், அவருக்கு *"நன்றி"* என்றார்...

அதன் பின் கூறினார் 
அவர் ஓர் விசுவாசியின் வீட்டுக்குச் சென்றதாகவும் 
அவர் இவரிடம் பாஸ்டர் 
பெரிய பெரிய பாஸ்டர்கள் காதில் இருந்து கண்ணம் வழியாக 
ஒரு *மைக்  மாட்டியிருப்பார்களே 
 அது போல் 
நீங்களும் மாட்டுங்கள் 
அதற்கு எவ்வளவு ஆனாலும் சரி 
நான் தருகிறேன் என்றாராம்.
அதற்கு 
 பாஸ்டர் சொன்னார் பிரதர் அதற்கு 
ரூ 26,000 ஆகுமே என்று !!! 
பரவாயில்லை
நான் வாங்கி தருகிறேன் என அவர் *வாக்குறுதி  அளித்ததாக சிலாகித்து பேசினார்...

இதற்கிடையில் இரண்டு மூன்று *காணிக்கைகள்* பற்றி பேசபட்டது. 
அநேக *காணிக்கை  அட்டைகளும்* விநியோகிக்கபட்டது. 

இப்போது
பாஸ்டர் அடுத்த குடை போட்டார். 
"நமது சபைக்கு
ரூ ஐந்து லட்சம்  மதிப்பில் *ஜெனரேட்டர்* வாங்கணும் 
ஆகவே நான் இப்பொழுது ஒரு *வாக்குறுதி*
*(Promise)* அட்டையை அனைவருக்கும் கொடுப்பேன் (அட்டை மிக அழகாக மிக பெரிதாக விசுவாசிகளை கவரும் விதமாக *கலர்புல்லாக* அடித்துள்ளதாக கூறினார்) 
 அதில் நீங்கள் *எவ்வளவு* தருகிறீர்களோ அதனை 
*டிக்✅☑* செய்து தாருங்கள் என்றவுடன் 

*இருபத்தையாயிரம் தருகிறவர்கள் கைகளை உயர்த்துங்கள்* என்றார் 

ஐந்தாறு முறை கூறியவுடன் ஒரு பெண் கையை மெதுவாக தூக்கினார்...

ஆங்...அதோ
டீச்சர்....
டீச்சர் தூக்கிட்டாங்க என்று குதுகலித்தார்....
வேறு யாராவது என ....
திரும்ப திரும்ப டீச்சரையும் அவர் பெயரையும் கூறி ஏலம் விட்டார்...
ஒருவர் கூட முன் வரவில்லை ...!!!

அடுத்ததாக கூறினார் பத்தாயிரம்....
பத்தாயிரம்....
பல தடவை சொன்ன பிறகு ஒருவர் கை உயர்த்தினார்...

அடுத்தாக...
ஐந்தாயிரம்....
ஐந்தாயிரம்....
இரண்டு மூன்று பேர் கைகளை உயர்த்தினர்..

அதன்பிறகும் 
சபை மக்களை பாஸ்டர் விடுவதாக இல்லை. 
*கரும்பு சக்கையாக* பிழிய ஆரம்பித்தார் 

இரண்டாயிரம்....
இரண்டாயிரம்... எத்தனை பேர் தருவீர்கள்.....?????

ஐந்தாரு பேர் கைகளை உயர்த்தினர்...
உயர்த்திய அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு *மனதில்லாமலேயே* கைகளை உயர்த்தியதை அங்கு காண முடிந்தது.

மறுபடியும் ஒரு *அறிவிப்பை* வெளியிட முன் வந்தார் ..

இதற்குள் நாங்கள் அனைவரும் *ஆளை விட்டால் போதும்* 
என்று வெளியேறினோம்
...
கொஞ்சம் விட்டால் சொத்தையே *எழுதி* வாங்கி விடுவார் போல....???

இதில் நாம் அனைவரும் கவனிக்க👀 வேண்டிய விஷயம் என்னவென்றால்....
நமக்கு என்ன *தேவையோ*
*(அன்றன்று அப்பம்)* 
அது *"பரத்தில்" இருந்தே கிடைக்கும் என்று நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் *ஜெபித்து* பெற வேண்டும், 

வேத பிரமாணமும் தேவ சட்டமும்📖 அவ்வாறே கூறுகிறது. 
அதை விட்டுவிட்டு மக்களின் பணத்தை💸 இப்படி 
*"பகல்" கொள்ளையன்⛓ போல அபகரித்தால்... 

விசுவாசிகள் விசுவாசத்தில் *"வளர" மாட்டார்கள் 

அப்படியே தான் இருப்பர்...!!!

நாம் அனைவரும்  நல்லதோர் *ஆவிக்குரிய* சபையை தேர்ந்தெடுத்து ஆண்டவர்☦ வருகைக்கு ஆயத்தமாவோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post