நாம் எப்போதும் கர்த்தர் நம்பி வாழ்வோமாக

நாம் எப்போதும் கர்த்தர் நம்பி வாழ்வோமாக

அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோ..” (ஏசாயா 7:3)

சீரியாவின் இராஜா, எருசலேமை வீழ்த்த, வட இராஜ்ஜியத்தில் பாளயமிறங்கினான். இதை கேட்ட யூதா நாட்டின் இராஜா ஆகாஸ் மிகவும் நடுங்கினான். அத்தருணத்தில், கர்த்தர் ஏசாயாவை நோக்கி ஆகாசை சந்திக்க கூறினார். மேலும், தன் மகன் ‘சேயார்யாசூபுவை’ கூட்டிக்கொண்டு செல்லுமாறு கூறினார். ஏசாயாவிற்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அவர்கள் இருவர் பெயருக்குமே தீர்க்கதரிசன அர்த்தங்கள் இருந்தன. ‘சேயார்யாசூபு’ என்பதின் அர்த்தம், ‘மீதியானவர்கள் இருப்பார்கள்’ என்பதே. எனவே, எருசலேமை அழிக்க சீரியா திட்டமிட்டாலும், மீதியானவர்கள் எருசலேமில் இருப்பார்கள் என்று ‘சேயார்யாசூபு’ மூலமாக கடவுள் ஆகாசிற்கு ஆறுதல் அளித்தார். ஆனால், ஆகாஸ் கர்த்தரை நம்பாமல், அசீரியா நாட்டின் உதவியை நம்பினான். அந்த யுத்தத்தில் அசீரியா யூதாவிற்கு உதவினாலும், அசீரியாவுடன் அவன் செய்த ஒப்பந்தம் அதிக பிரச்சனையையே கொடுத்தது. ஆகாஸ், அசீரியாவிற்கு அடிமையாகி, பின் ஆலயத்தின் பொக்கிஷங்களை அவர்களுக்கு கொடுத்தான். இப்படியாக, மாம்ச பெலத்தை நம்பினதினால், ஆகாஸ் தவறான முடிவை தேடிக் கொண்டான். எனவே, நாம் எப்போதும் கர்த்தரையும், அவர் வாக்குத்தத்தங்களையும் நம்பி வாழ்வோமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post