நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10)
மனிதர்களிடம் ‘பயம்’ பொதுவாக காணப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும் போது, பயம் நம்மை ஆட்கொள்கிறது. மேலும், பயம் நம்மில் கவலையை உண்டுப்பண்ணி, நம்மை ஒடுக்கிவிடுகிறது. எனவேதான், பயத்தை நம்மால் சுலபமாக மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று வேதாகமத்தின் கடவுள் கூறுகிறார்! அவர் நம்மை பலப்படுத்தி உதவி செய்வார். தேவ மனிதர்கள், அவர் மேல் நம்பிக்கை வைத்தே தங்கள் பயத்தை மேற்கொண்டனர். வல்லமையான பார்வோனை சந்திக்க மோசே பயந்தார். ஆனால், அவர் தேவனை நம்பினார், அப்பொழுது தேவன் அவரை பயன்படுத்தி தம் மக்களை விடுவித்தார். கோலியாத் என்னும் பெயர் கொண்ட ஒரு வீரனை சந்திக்க ஒரு தேசமே பயந்த போதிலும், சாதாரண ஒரு சிறுவன், ஆடுகளை மேய்ப்பவன், தேவன் மேல் நம்பிக்கை வைத்து, கோலியாத்தை சுலபமாக வீழ்த்தினான். தேவன் மேல் முழு நம்பிக்கை வைத்ததினாலேயே, ‘உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்’ என்று தைரியமாக தாவீது கூறுகிறார். ஆகவே, எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தேவன் மேல் நம்பிக்கை வைப்போம். அவர் நம்மை பலப்படுத்தி, நமக்கு உதவி செய்வார். ஆனால், நாம் தேவனுக்கு பயப்படுவது அவசியமாக உள்ளது. ஆமென்!

Post a Comment