இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக்கா 19:10)

எருசலேமிலிருந்து இயேசு பயணப்பட்டு, எரிகோ என்ற இடத்திற்கு வந்தார். அங்கு சகேயு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் இயேசுவை பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு காத்திருந்தான். ஆனால், அவன் குள்ளமாக இருந்தபடியினாலும், அதிக கூட்டம் இருந்ததினாலும், இயேசுவை நேரடியாக காண முடியாது என்று அறிந்து, பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்தான். இயேசு அவனிடம் வந்த போது, மேலே பார்த்து, சகேயுவை கீழே இறங்கி வரும்படி கூறினார். மேலும், அவன் வீட்டிலேயே தங்குவதாக கூறினார். சகேயு மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனால், சுற்றியிருந்த மக்கள், இயேசு ஏன் பாவியான மனிதன் வீட்டில் தங்க வேண்டும் என்று முறுமுறுத்தனர். ஆனால், சகேயு மனந்திரும்பினான், அப்பொழுது இயேசு, ‘இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்’ என்றார். சகேயு போல், நாமும் ஒருகாலத்தில் பாவத்தில் வாழ்ந்து வந்தோம். ஆனால், தேவன் நம் மேல் அன்பு வைத்து, நம்மை ஏற்று கொண்டார் அல்லவா! எனவே, கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தியை அனைவரிடமும் பகிர்வோமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post