மனமேட்டிமை


மனமேட்டிமை

“மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்” (நீதிமொழிகள் 16:5)

பெருமை, விழுந்து போன மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. மேட்டிமையான எண்ணம், மற்றவர்களை காட்டிலும் நாம் உயர்ந்தவர் என்ற அகந்தையை ஏற்படுத்துகிறது. வேதாகமத்திலும் சரி, உலக சரித்திரத்திலும் சரி, மனிதர்களையும் தேசங்களையும் ‘பெருமை’ கவிழ்த்துப்போட்டது என்பது வெளியரங்கமாக உள்ளது. இவ்வளவு ஆதாரங்கள் இருப்பினும், தேசங்களும் மனிதர்களும் தங்களை மேன்மைப்படுத்தியே காட்டுகின்றன. ஆனால், வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது! பாபிலோன், ஒருகாலத்தில் மேட்டிமையாக இருந்தான். ஆனால், கோரேசு என்பவனை கடவுள் எழுப்பி பாபிலோனை அழித்தார். மெய்யாகவே, தேவன் தாழ்மையுள்ளவர்களை தெரிந்தெடுத்து தம் மகிமையின் திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். இயேசு பூமிக்கு வந்த போது, அவர் இறுதிவரை தாழ்மையாக இருந்தார். அவர் ஏளனம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டார். இருப்பினும், அவர் பெருமை கொள்ளவில்லை. ஆனால், அவரின் தாழ்மையின் காரணமாக, அவர் உயர்த்தப்பட்டார். மேலும், இன்னும் சீக்கிரத்தில் அவர் உலகை ஆளுகை செய்வார். ஆகவே, நாம் எப்போதும் தாழ்மையுடன் இருந்து, கடவுளுக்கு மகிமைகளை செலுத்துவோமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post