கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங்கீதம் 107:1)

நாம் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை பலமுறை மறந்துவிடுகிறோம். மாறாக எல்லாவற்றிலும், எல்லா சூழ்நிலையிலும் நாம் குறை கூறுகிறவர்களாகவே காணப்படுகிறோம். சில சமயங்களில், நம் தவறான முடிவுகளுக்கும் கடவுளையே குற்றம் சாட்டுகிறோம். ஆனால், பாவ மனுக்குலம் மீது கடவுள் கொண்டுள்ள அன்பை சற்று நாம் நிதானிக்க வேண்டும். நாம் பாவிகளாய் இருக்கும் பொழுதே, நாம் இரட்சிக்கப்பட, கடவுள் தம் குமாரனை அனுப்பினார். அவரின் பெரிதான பலியால், நமக்கு உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவனின் நம்பிக்கை உள்ளது. ஆம், நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் நல்லவராகவே இருக்கிறார், நம் பாவங்களையும் கிருபையாக அவர் மன்னிக்கிறார். நம் வாழ்வில் பாடுகள் வரும் பொழுது, நாம் கடவுளின் வாக்குத்தத்தங்களின் மேல் நம்பிக்கை கொண்டு அவைகளை மேற்கொள்ள வேண்டும். அவர் இராஜ்ஜியம் வரும் பொழுது நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் என்பதில் நிச்சயம் கொள்வோமாக. எனவே, கடவுளை எந்நாளும் துதித்து, அவர் சித்தத்தின்படி முடிவுபரியந்தம் வாழ்வோமாக. ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post