ஓட்ட பந்தயம்
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” (1 கொரிந்தியர் 9:25)
அப்போஸ்தலர் பவுல், நம் கிறிஸ்தவ வாழ்க்கையை ஓட்ட பந்தயத்திற்கு ஒப்பிடுகிறார். அநேக போட்டிகள் உண்டு, அவை அனைத்திற்கும் குறிப்பிட்ட வழிமுறைகளும் உண்டு. குறிப்பாக, பந்தயத்தில் ஓடுகிறவன், தன்னை சரியாக பராமரித்து கொள்ள வேண்டும். இதற்காக கடினமான பல பயிற்சிகளை அவன் எடுக்க வேண்டும். அந்த வேதனை நிறைந்த பயிற்சிகளே அவன் போட்டியில் நிலைக்கவும், வெற்றி பெறவும் உதவும். அவன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தால், கிரீடம் பெறுவான். இதே போல் நாமும், சுவிசேஷ ஊழியம் என்னும் ஓட்ட பந்தயத்தை ஓட வேண்டும். அதன் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். இதற்காக நாம், நம் சரீரத்தை பராமரிக்க வேண்டும். எப்படி? நம் சுவிசேஷ ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நாம் விட்டுவிடவும் வேண்டும். இவைகளையே ‘தகுதியற்ற காரியங்கள்’ என்று வேதாகமம் கூறுகிறது. எனவே, நம் ஓட்டம், சுவிசேஷ பணிகள் செய்வது. அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் விட்டு விலகுவதே நம் பராமரிப்பு ஆகும். இந்த பயணத்தில் நாம் மரணம்வரை நிலைத்தால், பிதா நம்மில் பிரியப்படுவார். மேலும், அழியா நித்திய கிரீடத்தை அருளுவார். ஆமென்!
Post a Comment