நம் சுய பெலத்தை சார்ந்து வாழக்கூடாது

இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக் 2:4)

மேற்கண்ட வசனத்தில், ஒரு முக்கிய செய்தியை கடவுள் வலியுறுத்துகிறார். கல்தேயர்கள் மிகவும் வலிமை கொண்டு, யூதர்கள் உட்பட, பல தேசங்களை கீழ்படுத்தி வந்தனர். கல்தேயர்கள் பாபிலோனியர்கள் ஆவர். அவர்கள் தங்கள் எதிரிகளிடம் சிறிதும் இரக்கம் காட்டாமல், கொடுமையாக கொன்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் பெலத்தின் மீது முழுமையாக சார்ந்து, அதில் பெருமை கொண்டனர். தங்களுக்கு மேல் ஒருவரும் இல்லை என்று எண்ணினர். எனவே கடவுள், “அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்கிறார். அதேபோல், கடவுள் பாபிலோனை அழித்த போது, கடவுள் மீதும், இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் மீதும், விசுவாசம் கொண்டிருந்த யூதர்கள், தப்பி ஓடி, எருசலேமிற்கு திரும்பினார்கள். இந்த நிகழ்வு, நம் கிறிஸ்தவ பயணத்தில், நம் சுய பெலத்தை சார்ந்து வாழக்கூடாது என்பதை தெரிவிக்கிறது. எனவே, நாம் நம் சுய கிரியைகளில் பெருமை கொள்ளாமல், கிறிஸ்தவ விசுவாசத்தினால் உண்டாகும் கடவுளின் கிரியைகளை செய்ய முற்படுவோம். அப்பொழுதே பிழைப்போம். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post