விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்


விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்” (எபிரெயர் 11:8)

ஆபிரகாம், தன் ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால், அதை விட்டுவிட்டு, தான் காண்பிக்கும் இடத்திற்கு போகுமாறு கடவுள் கூறினார். தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் இருந்தும், ஆபிரகாம் புறப்பட்டுப்போனான். அவன் பல சோதனைகளை சந்தித்தான். ஆனால், தேவன் அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார். ‘விசுவாசமே’ ஆபிரகாமின் வெற்றிக்கு காரணம்! ஏனெனில், அவன் கடவுளின் வார்த்தையின் மேல் விசுவாசம் வைத்துச் சென்றான். ‘நம் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்’ என்று புதிய ஏற்பாடு கூறுகிறது (1 யோவான் 5:4). மெய்யாகவே, நம் அனைவருக்கும் மிக பெரிதான ஆசீர்வாதங்களை கடவுள் வைத்திருக்கிறார்! நாம் கடவுளின் வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைத்து, அதற்கேற்ற செயல்களை செய்வோமெனில், இந்த உலகை நாம் ஜெயித்து, வர போகும் ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். மேலும், சோதனைகளின் போதும் ஆபிரகாம் விசுவாசித்தான், அது கடவுளுக்கு பிரியமாய் இருந்தது. நாமும் சோதனைகளின் போது கடவுளை சார்ந்து அவருக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. அப்பொழுது, ‘ஏற்ற காலத்தில்’ தேவன் நம்மையும் வல்லமையாக உயர்த்துவார். ஆமென்!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post