பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது

நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது, இப்போதும் நீ உன் வீட்டிலே இரு, நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
2 நாளாகமம் 25:19

அமத்சியா ஏதோமியரை முறிய அடித்ததின் நிமித்தம் அவன் இருதயம் கர்வம் கொண்டது.
இந்த கர்வம் அவன் இருதயத்தில் முன்பே மறைந்திருந்தது யுத்தத்தில் ஜெயித்ததினால் அவை வெளியரங்கமானது.

இருதயத்தின் கர்வம் தேவனைவிட்டு தூரம் போகச்செய்யும் .அமத்சியா சேயீர் புத்திரர்களின் தேவனை வணங்கும்படி குருட்டாட்டத்தில் அவனைத் தள்ளியது
இருதயத்தில் கர்வம் வரும்போது மனசாட்சி கூர்மையாக இருப்பதில்லை அவை மழுங்கிப்போய் இருக்கும் இதனால் தான் செய்வது எல்லாம் சரி என்றே இருதயத்தில் படும்.

இருதயத்தில் கர்வம் என்பது என்ன?
உண்ணைப்பற்றி நீ மதிப்பீடு செய்திருக்கும் நிலையே கர்வம்.
இவை எப்படியெல்லாம் பயனிக்கும்....கர்வம் இருதயத்தில் விதைத்தலும் அதனால் வினையை அறுத்தலும்.

1.ஒரு பெலவீனனைக் கானும்போது.அவனைப் பரிதாபமாகப் பார்த்து தன் மனதில் எண்ணும் நினைவுகள் எப்படியாக இருக்கும் அவை கர்வம். இதன் நிமித்தம் தன்னைவிட ஒரு பெலசாலியால் அவமானப்படுத்தப்படுவோம்.

2.ஆவிக்குரிய ஜீவியத்தின் அடிப்படையில் ....ஒரு மனிதன் பலவிதமான பாவங்களுக்கு அடிமையாக இருப்பதை நாம் பார்க்கும்போது அவ்வித பாவங்கள் நாம் செய்யாமல் இருக்கும்பட்சத்தில் ...அந்த மனிதனைக் குறித்து நாம் இருதயத்தில் அற்ப்பமாக எண்ணும் எண்ணங்கள் கர்வம்.

அந்த கர்வம் என்ன செய்யும் எந்த பாவத்தை செய்யாமல் நாம் இருந்தோமோ அதே பாவத்தில் இழுக்கப்பட்டு செய்கிறவர்களாக காணப்படுவோம். தேவன் தந்த கிருபையை எண்ணி நன்றி செலுத்தாமல் போனதே அதற்கு காரணம்.

3.சிலர் தாங்கள் மாதம் எவ்வளவு செலவழிக்கிறார்களோ அதைக்குறித்து இருதயத்தில் பெருமையாக எண்ணி பிறரிடம் பேசுவார்கள்.

4 சிலர் சாட்சிக் கூறும்போதுக் கூட " நான் குடித்து வெறித்து காணப்பட்டேன் இப்பொழுது நா தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன் என்றுச் சொல்லும்போது தேவனுடைய தயவையும்,கிருபையையும் எண்ணிக் கூறாமல்...அந்த இருதயத்தில் பரிசுத்தவானாக தான் இருப்பதாகவும் ,தான் இப்பொழுது தேவனுக்கு முன்பாக செம்மையாக நடப்பதாகவும்
எண்ணங்கொள்வது கர்வம்.

இன்று தேவனிடத்தில் இருந்து ஒத்தாசை வராமல் இருப்பதற்கு முழுக் காரணமே நம் இருதயத்தில் மறைந்திருக்கும் கர்வமே!
சரி கர்வம் இருப்பதை எப்படி நாம் உணர்ந்து மனந்திரும்புவது?

ஆத்துமாவில் வாழும் எவரும் தன்னிடத்தில் கர்வம் இருப்பதை உணரமுடியாது! ஆத்தும சிந்தையில் இருக்கும்போது நம்முடைய சுயம் அதை நிதானிக்க விடாது!

ஆவியின் சிந்தையில்தான் நம் இருதயத்தில் மறைந்திருக்கும் கர்வத்தை உணர்ந்து தேவனுடைய நீதியின் நிமித்தம் மனம் கசந்து அழுது மனந்திரும்பமுடியும்.

எல்லா பாவத்தை நிதானிப்பதுப்போல் ..பெருமையையும் ,கர்வத்தையும் நிதானிக்கமுடியாது!

பெருமையையும் கர்வத்தையும் ஆவியின் சிந்தையில்தான் உணர்ந்து மனந்திரும்பமுடியும்.
நம் இருதயத்தில் மறைந்திருக்கும் கர்வத்தால்...
ஆவிக்குரிய ஜீவியத்தில் பெருமையும்,அநேக பெலவீனங்களுக்கும் காரணமாகிவிடுகிறது.

ஜெயமில்லாத ஜென்ம சுபாவங்களுக்கும் முக்கிய காரனமே இந்த கர்வம்தான்.

இந்த கர்வம் சுயம் என்ற சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி செய்வதால் எளிதாக இவற்றை தள்ளிவிடமுடியாது.

கர்த்தர் நல்லவர் !

இன்று நான் என் பெலவீனங்களைக் கண்டு வேதனைப் பட்டபோது என் தோல்விகளுக்கு காரணம் என் இருதயத்தில் மறைந்திருக்கும் கர்வமே காரணம் என்று கர்த்தர் உணர்த்தினார்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Down our Daily Bread Tamil App for Android.
http://www.mediafire.com/file/o605w84adwc3lb9/Daily_bread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post