கிறிஸ்தவனே உன் நிலை என்ன?

கிறிஸ்தவனே உன் நிலை என்ன?

ஜெபங்கள் அனைத்துமே உணர்வற்ற பாரம்பரியமாக மாறிவிட்டது!

அன்றய சமுதாயத்தில் கிறிஸ்தவன் என்பவன் நல்லவன் என்றப் பேச்சு புழக்காத்தில் இருந்ததே!
இன்று சுயநலக்காரன் தந்திரக்காரன் என்ற அடைமொழிக்குள் இருக்கின்றானே!

என்ன நடந்தது?
உலகில் சத்துருவினால் அநியாயங்கள் பெருகிக்கொண்டே வருகிறது அந்த அநியாயங்களை தடுக்க ஜெபம் என்ற யுத்தக்களத்தில் நீதியின் ஆயுதங்களை ஏந்தி போராடக்கூடிய கிறிஸ்தவனோ இன்று தற்காப்பு கவசத்தில் மாத்திரம் குறியாக இருந்து தன்னைக் காப்பதிலே மிக கவனமாக இருக்கிறான்.

உலகில் கொலை ,கற்பழிப்பு,கடத்தல்,இன்னும் எத்தனையோ அநியாயங்களை கேள்விப்படும்போதல்லாம் தன் பாதுகாப்பை எண்ணி சந்தோசம் கொள்கிறானே தவிர பாதிக்கப்பட்ட அந்த ஜனத்தை எண்ணி சிறு வருத்தம் கூட அவன் மனதில் தோன்றுவதில்லை!
ஆசிர்வாதம் என்ற ஒரே சிந்தையில் இருந்துக்கொண்டு செழிப்பையே கவனமாக கருத்தில்க் கொண்டு நடக்கிறான் .தேவனுடைய கிருபை என்னவென்பதை அறியாமல் எல்லாவற்றையும் தேவனே செய்வார் நான்  நிம்மதியாய் உறங்குவேன் என்ற தவறான கோட்பாட்டில் இன்றய கிறிஸ்தவன் இருக்கிறானே!

தன்னைப்போல் பிறனை நேசி,தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை சுமப்பது என்ற அனுதினம் சுயத்துக்கு சாகிறது,தரித்திரனுக்கு இரங்குதல்,என்ற தேவனுடைய பிரதான நோக்கத்தை மறந்துவிட்டு ,தேவனே அங்கே ஆபத்து நேரிட்டது எங்களுக்கு அவைகள் வராமல் பாதுகாத்தீரே உமக்கு நன்றி என்று ஆபத்தில் மாட்டின ஜனத்தின் வலியை உணராமலும் அவர்களைக் குறித்த பாரம் இல்லாமலும் துனிகரமாக துதிக்கும் கிறிஸ்தவனே! தேவன் உன்னை மெச்சிக்கொள்வாரோ?

பொல்லாத இருதயமுள்ள சுயநல கிறிஸ்தவனே நீ யாருக்கும் கொடுக்காவிட்டாலும் பரவால சமுகத்தில் பாதிக்கப்பட்டு குற்றுயிராக புலம்பும் ஜனத்துக்காக இன்றுவரை ஒரு சொட்டு கண்ணீராவது தேவ சமுகத்தில் வடித்திருப்பாயா?

ஒவ்வொரு நாளும் ஏழை ஜனங்கள் படும் அவலநிலையைக் கண்டு தேவ சமுகத்தில் அழுகிறவன் எங்கே?
எரோமியாபோல அழுகிறவன் இன்று தேவனுக்கு தேவையல்லவா?
இன்றய கடைசி நாளில் தேவன் உலகில் கிரியை செய்ய இன்று அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு தேவ சமுகத்தில் புலம்பும் கிறிஸ்தவன் தேவை!

கடைசி நாளில் தேவன் எழும்ப உன்னுடைய ஜெபம் தேவை நீ ஜெபிக்காதப் பட்சத்தில் உபத்திரவத்தின் நாட்கள் கூடத்தான் செய்யும் நீ ஜெபித்தால் உபத்திரவத்தின் நாட்கள் குறைக்கப்படும் அல்லவா?
உலகில் நடக்கும் கொலையைப் பார் அது உன் குழந்தையாக இருந்திருந்தால்......உன் மனைவியாக இருந்திருந்தால்......அது நீயாக இருந்திருந்தால்.....அந்த இடத்தில் உன்னை வைத்து சிந்தித்துப்பார் அப்பொழுதுதான் அதன் வேதனையை உன்னால் உணரமுடியும்!

ஒரு மாணவி கற்பழிப்பை பார்த்து நீ என்ன சிந்திக்கிறாய் அந்தப் பெண்ணின் நடக்கையையும் போக்கையும் காரணமாக வைத்து விமர்சிக்க பழகினவனே அந்த இடத்தில் உன் பாச குழந்தையை வைத்து சிந்தித்துப்பார்!

காவல்துறையின் அடாவடித்தனத்தால் ரோட்டில் உறங்கினவனைப் பிடித்து கேஸ் பைல் பன்னி செய்தித்தாளில் வரும் செய்தியைப்பார்த்து அதை அப்படியே நம்பி அந்த ஏழையின் கூக்குரலை ஜெபத்தில் அறியாமல் இருக்கும் உணர்வற்றவனே! அதுபோல உனக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்?
உலகில் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கானும் நான் எப்படி சந்தோசமாக இருப்பேன்?

பாதிக்கப்படும் மக்களின் கூக்குரலைக் கேட்கும் நான் எப்படி காதில் இயர் போன் மாட்டிக்கொண்டு இனிய பாடலில் மகிழ்ந்திருப்பேன்?

என் துக்கம் ஆராத புண்களாக இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் கிறிஸ்தவனோ வலியை உணராதவனாக கூறுகிறான் “கர்த்தர் அந்த பாதிக்கப்பட்ட ஜனத்தைப் போல அல்லாமல் என்னை சுகமாக வைத்திருக்கிறார்” அவர்கள் குறைவினால் தற்கொலை செய்கிறார்கள் எங்களையோ தேவன் சிங்க குட்டிப்போல கொழுத்திருக்கச் செய்திருக்கிறார்”
அவர்கள் பெலன் இல்லாமல் புலம்புகிறார்கள் நாங்களோ காண்டாமிருகத்துக்கு ஒத்த பெலத்தோடு இருக்கிறோம் என்று மகிழ்ந்து துள்ளுகிறான் .

கிறிஸ்தவனே அடுத்த சத்துருவின் இலக்கு நீதான் கர்த்தர் உன்னை காக்கமாட்டார் .ஏன் என்றால் அடுத்தவன் பாதிக்கப்படும்போது அவனை காப்பாற்ற முடியாவிட்டாலும் அவனுக்காக குறைந்தப் பட்சம் கவலையாவது பட்டிருக்கவேண்டும் ஆனால் நீயோ சுயநலக்காரன் அதனால் நீ பாதிக்கப்படும்போது தேவனால் உனக்கு உதவ முடியாது! அவர் மாறுபாடுள்ளவனுக்கு மாறுபாடு உள்ளவராகவும் புனிதனுக்கு புனிதராக இருப்பார் என்பதை அப்பொழுது விளங்கிக்கொள்வாய்!

இதோ ஆபத்து பூசலைப்போல வருகிறது அவனவன் செய்த நீதியையும் இரக்கத்தையும் நினைத்து கர்த்தர் அவருடைய ஜனத்துக்கு இரங்குவார்!நீதியும் இரக்கத்தையும் விட்ட பொல்லாத கிறிஸ்தவனேஉன் நிலமை கேள்விக்குறியே!

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post