தற்புகழை விரும்புவது.

தற்புகழை விரும்புவது.

அறிவை வளர்த்துக்கொள்ள எல்லோருக்கும் இயல்பாகவே ஆசை உண்டு.ஆனால் தெய்வபயம் இல்லாத அறிவினால் எந்தபயனும் ஏற்படபோவதில்லை.

தன்னை அறியவேண்டிய பிறகாரம் அறியானல் நாம் பல தத்துவ அறிவையும்,விஞ்ஞான அறிவையும்,சமுககலாச்சார அறிவையும் பெற்ற தலைசிறந்த அறிவாளியாக இருந்தாலும் ஒரு நன்மையும் இல்லை.அதேசமயம் எந்த அறிவும் இல்லாத ஒரு ஏழை கர்த்தருக்குப் பயந்து வாழ்வானால் அவனே தேவனால் கனப்படுத்தப்படுவான்.

அறிவு என்பது மனிதனுக்கு கருவிப்போன்றதே அதை கர்த்தருக்குள் இருந்து உபயோகப்படுத்தினால் அது அவனுக்கும் அவனைச் சுற்றியுள்ளோருக்கும் பயனைக் கொடுக்கும்.
உண்மையில் ஒருவன் தன்னைப்பற்றி முழுவதும் அறியவேண்டிய விதத்தில் அறிந்திருந்தால் தன் இருதயத்தில் தன்னைப்பற்றி புகழ்ச்சியாக எண்ணமாட்டான் .அவன் தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவத்தில் இருந்தாலும் அவன் தன்னைப்பற்றி புழான்.அவன் வாயில் தொனிக்கும் வார்த்தையெல்லாம் தேவ கிருபையே என்னைத் தாங்குகிறது.நான் ஒன்றுமில்லை என்று எண்ணிக்கொள்வான்.

தன்னைத்தான் பிறனிடம் புகழ்கிறவன் தன்னைப்பற்றி அவன் அறியவில்லை என்றே பொருள்.
தன்னைத்தானே அறிந்தவன் தேவனையே மகிமைப்படித்துவான்.

உண்மையான மனிதன் பிறர் சொல்லும் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சமநிலையில் வைத்துப்பார்க்கும் தன்மையுடையவனாக இருப்பான்.

இவ்வுலகத்தின் தலைசிறந்த அறிவாளியாக இருந்தாலும் அன்பு எனக்கு இராவிட்டால் செய்கைக்கு தக்க பலனளிக்கும் தேவனிடத்தில் எனக்கு என்னக் கிடைக்கும்.

இந்த காலைவேளையிலும் நாம் நம்மை அறிந்துக்கொள்வோம்.கிருபை நம்மை தாங்காவிட்டால் நாம் ஒரு மிகப்பெரிய பாவிதான்.ஆவிக்குரிய ஜீவியத்தில் பெலவானாக,ஜெபவாழ்வில்
நிற்கிறதாக இருந்தாலும் தாழ்மையே நம்மை நாம் அறிந்துக்கொள்ள உதவும்.

தற்புகச்சியையும்,பிறரிடம் இருந்து வரும் புகழ்ச்சியையும் விரும்பாமல் தேவன் என்னைத் தெரிந்துக்கொண்டார் அவர் கிருபையில் பெலத்தால் யாவற்றையும் அறிந்து செய்கிறேன் என்று உணருவோம்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post