உலக ஞானம் உலக அறிவு
உலக ஞானம்,உலக அறிவைப்பற்றிய மிதமிஞ்சிய ஆர்வத்தை விட்டுவிடு.மனக்கலக்கமும் வஞ்சகமே அதன் பலன்.
அறிவு உண்டானவுடன் ,மற்றவர்கள் தங்களை ஞானிகளென்று எண்ணவும்,அழைக்கவும் விரும்புகின்றனர்.அளவற்ற அறிவினால் ஆத்துமாவுக்கு எவ்விதபுரோஜினமும் இல்லையென்று உணராதிருக்கிறார்கள்.
தன் ஆத்துமாவின் இரட்சிப்புக்கான காரியங்களை நாடாமல் மற்றவைகள் மேல் தன் காலத்தைப் போக்கிறவர்கள் மதிகேடர்கள்.
சிலர் தன் மாம்ச ஆசைகளை பூர்த்திச்செய்யவே உழைக்கிறார்கள் அவர்கள் சமுதாயத்தில் தன்னைப்பற்றி பிறர் மேன்மையாக எண்ணவேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.
பிறனைவிட தான் மேன்மையடையவேண்டும் என்ற இருதய எண்ணமே அநேக பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
எப்பொழுது ஒருவன் சுயமேன்மையை தன் இருதயத்தில் சிந்திக்கிறானோ அப்பொழுதே அவன் தாழ்மையை உதறிவிட்டு மேட்டிமையை பற்றிக்கொள்கிறான்.
தன்னைச் சுற்றிலும் தவறு நடப்பதாகவும் தான் மாத்திரம் நல்லவன் என்கிற சிந்தை வஞ்சகத்தில் கொண்டுப்போய் நிறுத்தும்.தன் தவறை உணராத அகந்தையின் போக்கை அவன் பெற்றிருப்பதை உணராதபடி பிறனைக் குற்றப்படுத்திக்கொண்டே இருந்து வஞ்சகத்தில் இருந்து தப்புவிக்கமுடியாத சுயநீதியில் பிடிக்கப்பட்டிருப்பான்.
நீ ஒருவனிடம் தவறைக் காண்பாயானால் உடனே கடிந்துக்கொள்ளாதே அவனுடைய தவறுக்கு என்னக்காரணம் என்பதை ஆராய்ந்து அந்தப்பகுதியை பக்குவமாக சாந்தமாக புரிந்துக்கொள்ளச்செய்.அப்பொழுது நீயும் மேட்டிமையின் வலையில் சிக்கிக்கொள்ளமாட்டாய்.
தன்னை ஞானியாகவும் பிறனை அற்பமாக நினைக்கிறவன் அகந்தையின் சிறைச்சாலையில் இருக்கிறான் .
ஒரு நஷ்டம் உன் நிமித்தமாக வந்திருக்கும்போது உன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு உணராமல் அந்த நஷ்டத்துக்கு பிறனை சுட்டிக்காட்டுவாயானால் உனக்கு வரும் பெரும் ஆபத்துக்கு உண்ணை யாரும் தப்புவிக்கமுடியாது.
இந்த நாளில் நம்மை நாம் ஆராய்ந்து பிறனை தன்னிலும் மேன்மையாக கருதி வாழ அர்ப்பணிப்போம்.

Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com
Download our Daily Bread Tamil App for Android.
https://www.mediafire.com/download/xw25rfr8xbdx9c3

Post a Comment