உனக்குள் உன்னைப் பார்!

உனக்குள் உன்னைப் பார்.

தேவன் இந்த முழு உலகத்தில் இருப்போரைக் கவனிக்கிறார்.அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை!

நம்முடைய பேச்சுகளும்,நடத்தைகளும் எவ்வாறு இருக்கிறது என்று நாம் ஆராய்வதற்கு முன்பே நம்மை  அவர் நம்மைப்பற்றி அறிந்திருக்கிறார்.

நம்முடைய ஒவ்வொரு துர்செகைக்கும் உடனே  தண்டனைக் கிடைக்கவில்லை .அதனால் தேவனுக்கு நாம் பயப்படுவதில்லை, காலப்போக்கில் நாம் செய்யும் தவறுகளை நாம் அங்கிகரிப்பவர்களாக மாறிவிடுகிறோம்.

ஆகையால் நம்முடைய பெலவீனத்தை நாம் அறிந்தும் அதன் நிமித்தம் நம்மை நாம்மைக் குறித்து வெட்கம் அடையாமல்  அதை சாதாரனமாக எடுத்துக்கொள்கின்றோம்.அதேநேரத்தில் பிறனுடைய பெலவீனங்களைக் காணும்போது உடனே நியாயந்தீர்ப்பதுப்போல விமர்சனங்கள் செய்கிறோம்.

நீ எவ்வளவு காலம்  தேவனுடைய வழியில் நிலைத்திருப்பாய் என்பதை  உனக்கே தெரியாததால் ஒருவன் தன் பாவத்தை வெளியரங்கமாக செய்யும்போதும்,பெரும் பாதகத்தை செய்யும்போதும் அதை கண்ணாரக் கானும்போது அவனை விட உன்னை நீ நீதிமானாக எண்ணி பெருமைக்கொள்ளாதே!

நாம் எல்லோரும் பெலவீனர்களே! உன்னைவிட  பெலவீனன் எவனுமில்லை என்பதை மறந்துவிடாதே!
ஆகையால் கர்த்தருக்குப் பயந்து பெருமையையும்,புரட்டுவாயையும் விட்டுவிடு!
அது உன்னை இருதயத்தின் கடினத்துக்கே கொண்டுச்செல்லும்.

தேவன் நல்லவர் நம்மை பாதுகாக்கிறார்,நமக்கு அவர் கேடகமாக இருந்து தீமை வராதபடி பாதுகாக்கிறார் அதை நாம் சாதகமாக்கி தைரியமாக துனிகரமாக பாவம் செய்யமுற்படக்கூடாது.

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை நம் அனைவரோடுக் கூட இருக்கிறது.


Visit our blog for daily devotional
http://dailybreadchristian.blogspot.com

Download our Daily Bread Tamil App for Android. 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post