தவறான உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்


தவறான உபதேசத்தை விசுவாசித்து கூறுபவனுக்கும்,மெய்யான உபதேசத்துக்கு கீழ்படியாதவனுக்கும் அதிகவித்தியாசம் உண்டு ,மெய்யான உபதேசத்துக்கு கீழ்படியாதவன் ஒருவேளை மனந்திரும்ப வாய்ப்புள்ளது.

ஆனால் உபதேசத்தில் நஞ்சை கலந்து பரப்புகிறவன் தான் வஞ்சிக்கப்பட்டுள்ளதையே அறியாமல் மற்றவர்களையும் கெடுக்கிறான், ஆகையால் வஞ்சகன் கொடியவனா?பாவிகள் கொடியவனா?

பாவி தன்னைத்தான் பாவி என்பதை ஒத்துக்கொள்வான் ஆனால் வஞ்சகன் ஒருபோதும் தன் குற்றத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்.தன்னை நீதிமானாய் மற்றவர்கள் முன்பு காட்டுவதிலே கவனமாய் இருப்பான் .ஆகையால் துர் உபதேசத்தால் வரும் வஞ்சனை ஒரு மனிதனின் விசுவாசத்தையே உடைத்து நித்திய ஜீவனை அடையமுடியாதபடி மாம்சஜீவியத்தில் நிலைகொள்ளச்செய்
யும்.ஆகையால் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2

Click below to download our app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post