பொறாமை

ஒருவருடைய பல கஷ்டங்களைப் பார்த்து அவர்களுக்காக கண்ணீர்வடித்து ஜெபிக்கும் அநேகர்...பின்னாட்களில்
கஷ்டப்பட்ட மனிதர் நல்ல நிலையில் ஆசீர்வாதமாக இருக்கும்போது அவர்களுக்காக முன்பு ஜெபித்தவர்கள் கண்டு தேவனை துதிக்கவில்லை என்றால்..

காரணம்.1
நான் இவருடைய கஷ்டத்துக்காக முன்பு ஜெபித்தவன்/வள், நன்றி இல்லாத இவர் என்னை கண்டுக்கொள்வதில்லை
என்ற எண்ணம்.
இது ஆசிர்வாதத்துக்கு காரனம் நான் ஜெபித்ததால் என்று மகிமையை 'தனக்கு' தரவில்லையே என்ற மனப்போக்கு!

காரணம் 2
தன்னிலும் மிகுதியாக ஆசிர்வாதமாக அல்லது தனக்கு ஈடாக ஆசிர்வாதமாக இருக்கிறாரே...
இதன் மனப்போக்கு தன்னிலும் ஒரு படி கீழேதான் இருக்கனும் என்ற மனபோக்கு.

இந்த இரண்டு காரணத்திற்கும் ஒரே வேர் 'பொறாமை'
ஒருவருக்கு வேலை இல்லை என்று கண்டு அவருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் அவருக்கு வேலையும் கிடைக்கிறது.

ஆனால் அந்த வேலை, வேலைக்கு ஏற்ப்பாடு செய்பவரைவிட நல்ல உயர் பதவியாக இருக்கும்பட்சத்தில்... உள்ளத்தில் "நம்மை விட உயர்பதவியில் இருக்கிறான் நம்மை விட அதிக சம்பளம் என்ற ஒரு வேதனை மனதில் உண்டாக்குகிறது என்றால் அந்த எண்ணமே பொறாமையில் இருந்து வருபவை!!!

இவ்வுலகில் நாம் வெறுமையாக வந்தோம்.போகும்போது கிறிஸ்துவின் சுபாவங்களை ஆத்துமாவில் உடையவர்களாக போகவேண்டுமே தவிர இவ்வுலகில் உள்ள எதையும் கொண்டு செல்வதில்லை!
ஆகையால் இவ்வுலகத்தின் அதிக செல்வம்,பதவி,அதிகாரம் எல்லாம் ஒரு மாயை கனவுப்போல மறைந்துப்போகக்கூடியதே!

ஆகையா நம்மை நாமே இந்த காலை வேளையில் நிதானித்துப்பார்த்து..தேவனிடத்தில் நம்மைத் தாழ்த்துவோமாக.

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2:17

Click below link to download our daily bread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk/file

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post