சுய மகிமை

தன் சுயத்தை வெளிப்படுத்திக்கொண்டே தேவ நீதியைப் பற்றி பேசுவது பரிசேயர்களின் மாய்மாலத்தைவிட மிக மோசமானது.

நாம் பிறருக்கு கொடுக்கும் உபதேசமோ,அல்லது அறிவுரைகளோ முதலில் நம்மை நாம் சீர்தூக்கிப் பார்த்துவிட்டு பிறருக்கு என்ற நிபந்தனை வைத்தால்...இந்நேரம் நாம் உலகத்தை கலக்குகிறவர்களாக இருப்போம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று தன்
சுயத்தை வெளிப்படுத்திக்கொண்டே தேவநீதியையும்,சிர்திருத்த கருத்துகளையும் பேசுவதால்..உலகத்தில் சாட்சிகெட்டவர்களாக இருந்து அநேகர் கிறிஸ்துவுக்குள் வர இடறலாகவே இருக்கிறோம்.

ஆதிகாலத்தில் பரிசேயர்கள் தங்கள் சுயத்தை மறைத்து தங்களை நீதிமானாக பிறருக்கு காண்பிக்கும்படியாக மாய்மாலமாக நடந்தார்கள்.

இன்றய நவீன பரிசேயர்கள்...சுயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி கிறிஸ்துவின் சிந்தைக்கு தன்னை தூரமாக்கி தன் சுயத்தையும் ,சுயமகிமையையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி ...சீர்திருத்த்த கருத்துகளையும்,தேவநீதியையும் பற்றி பேசுவது முன்னுக்கு முரண்.

உண்மையிலே கிறிஸ்துவிடம் இருந்து தேவநீதியைப் பெற்றிருந்து தன் ஜீவியத்தில் அதை உள்வாங்கி கிறிஸ்துவின் உபதேசத்தை பிறருக்கு கூறும்போது அதில் ஜீவனைக் காணலாம் .

மாறாக சுயமகிமைக்காக பிறர் தன்னை யோக்கியனாக நினைக்கும்படியா
கவும்,தன்னை பிறர் உயர்வாக மெச்சுக்கொள்ளும்படி தேவநீதியையும்,க
ிறிஸ்துவின் உபதேசத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினால் மெய்யாகவே மெய்யாகவே கிறிஸ்துவுக்குள் நமக்கு பங்கில்லாமல் போகும்,நாம் சீர்பட வழியேதுமில்லாமல் ஆகிவிடும்.

மெய்யான மனசாட்சி என்பது கானல் நீராகிவிடும்.
குருட்டாட்டமும்,சுயநீதியுமே நம்முடைய பங்காக இருக்கும்.

ஜீவனையும்,சமாதானத்தையும் உணரமுடியாத வெறுமையான முடிவுக்குள் நம்மை அவை இழுத்துச்செல்லும்.
ஆகையால்....சகோதரரே இவை எனக்கும் உங்களுக்கும் பொதுவானவையே!
நம்மை நாம் நிதானித்து சீர்தூக்கிப்பார்ப்போம்.

சுய மகிமைக்காக கிறிஸ்துவின் உபதேசத்தை பிரசங்கிக்காமல்..தேவ மகிமைக்காக செய்வோம்.

Click here to download our dailybread app 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post