யூதாசுகள் உணர்வடையலாம் ஆனால் லூசிபர்கள் உணர்வடைவது கடினம்!
யூதாஸ் - உலகை உண்டாக்கியவர் பின்னால் அலைந்தும் உலக மாயையால் இழுக்கபட்டு பண ஆசையால் வீழ்ந்தான்
லூசிபரோ - உலகமே தன்னை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன்னைதானே உயர்த்தி பெருமையால் வீழ்ந்தான்
30 வெள்ளி காசுக்காக ஆண்டவரை கட்டிகொடுத்த யூதாசானவன் இயேசு மரண ஆக்கினைக்கு தீர்க்கபட்டார் என்பதை அறிந்த பின்னராவது உணர்வு வந்து "குற்றமற்ற இரத்தத்தை காட்டி கொடுத்தேன்" என்று மனம் கசந்து வருந்தினான்.
அனால் தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்துவேன் என்று சிந்தித்த அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியோ! இன்றுவரை கொஞ்சமும் உணர்வடையாமல் தேவனுக்கு எதிர்த்து நின்று மேலும் மேலும் கடினமான நிலைக்கே சென்றுகொண்டு இருக்கிறான்.
இதன் மூலம் நாம் ஒரு உண்மையை அறியலாம்!
உலகத்தின் பின்னாலும் பணத்தின் பின்னாலும் ஓடும் ஒருவர் என்றாவது ஒருநாள் உணர்வடைந்து ஆண்டவரிடம் வந்துவிடலாம்.
ஆனால்
உள்ளுக்குள்ளே தன்னை தானே உயர்த்தி பாஸ்ட்டர் ரெவரண்ட் / எல்லாம் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு திரிபவர்கள் கடைசிவரை மனம்திரும்ப வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
காரணம் அவர்கள் தேவனுக்கு அருவருப்பான நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாதபடிக்கு இருதய கடினத்தில் இருக்கிறார்கள். அறியாமலேயே லூசிபருக்கு ஊழியம் செய்கிறார்கள்.
பணத்தின் பின்னால் ஓடி பின்னர் மனம்திரும்பி
மத்தேயு 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்
என்று புலம்பிய யூதாசுக்கே மன்னிப்பு கிடைக்காமல் நான்று கொண்டு செத்தான் என்று வேதம் சொல்லும் பட்சத்தில்
மனம்திரும்ப வேண்டிய அவசியத்தை அறியாமல் தங்கள் இருதயத்தை கடினமக்கிகொண்டு தன்னை தானே உயர்த்திக்கொண்டு திரியும் லூசிபர்களுக்கு மன்னிப்பு எவ்வளவு தூரமாகி போகும் என்பதை எண்ணி உணர்வடைவோம்.
எந்நிலையிலும்/ நம் இருதயத்தில்கூட நம்மை உயர்த்த வேண்டாம். ஆலயத்துக்கு வரும் ஒரு சாதாரண விசுவாசியைவிட நாம் எவ்விதத்திலும் பெரியவர்கள் அல்ல என்ற உண்மையை உணரவேண்டும்.
சிறுமையும் எழிமையுமான அவர்களிடமே தேவன் அதிக பிரியமாயிருக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சங்கீதம் 140:12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
Follow us on
Devotional Songs ,Sermons -
https://perfectioninjesuschrist.blogspot.com
https://perfectioninjesuschrist.blogspot.com
Click below link to download our dailybread app.
Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/
https://www.facebook.com/perfectionInJesusChrist/
Post a Comment